கோழி ரத்தத்தைப் பூசிக்கொண்டு தொழிலதிபர் மீது போலியாக பாலியல் புகார் கூறிய பெண்!
மோனிகா என்ற பெண் தொழிலதிபர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்துவதற்காக கோழி ரத்தத்தை தன் மீது பூசிக்கொண்டு அவரால் தாக்கப்பட்டதாக வழக்கை ஜோடித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் 64 வயது தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டிய பெண், தனது கைகளில் கோழி இரத்தத்தை தடவிக்கொண்டு, அந்த நபர் தன்னைத் தாக்க முயன்றபோது தான் காயமடைந்ததாகக் பொய் கூறியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோனிகா பகவான் என்கிற தேவ் சவுத்ரி என்ற பெண் தனது மூன்று கூட்டாளிகளின் உதவியுடன், தொழிலதிபரிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ரூ.3 கோடியை பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த வாரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் மோனிகா சவுத்ரிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பணத்தை இழந்த கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், நவம்பர் 2021 இல் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார். நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னை மிரட்டி ரூ.3.25 கோடியை பறித்துச் சென்றதாக புகாரில் கூறியிருந்தார். ஏமாற்றிச் சென்றவர்கள் பின்பும் அவரை வீடியோ மூலம் மிரட்டி மேலும் ரூ.2 கோடி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அதில், மோனிகாவுக்கு உடந்தையாக இருந்த அவரது மூன்று கூட்டாளிகள் ஆகாஷ் என்ற அனில் சவுத்ரி, ஆடை வடிவமைப்பாளரான லுப்னா வசீர் என்ற சப்னா மற்றும் நகை வியாபாரி மணீஷ் சோடி என அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் இருந்தே அனில் மற்றும் சப்னா இருவரும் தொழிலதிபருடன் நட்பு கொண்டு, அவரது சொத்துக்களை அபகரிக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தபோது, தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக மோனிகா குற்றம் சாட்டினார். மோனிகாவின் கூட்டாளியான சப்னா, அப்போது இருவருக்கும் நடந்த சண்டையை வீடியோவை எடுத்திருக்கிறார். இந்த வழக்கில் மோனிகா ஜூன் 2022 இல் கைது செய்யப்பட்டார்.
பிளாட்பாரத்தில் தூங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் உதைத்து எழுப்பிய ரயில்வே போலீஸ்!