குடையை மிஸ் பண்ணிடாதீங்க.. 5 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை.!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அது என்னென்ன இடங்கள் என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்து பெரும்பாலான இடங்களில் பருவமழை ஆரம்பித்துவிட்டது. பல இடங்களில் கணிசமாக மழை பெய்தே வருகிறது. கோடை வெயிலில் சிரமப்பட்ட மக்களுக்கு இது பெரிய ஆறுதலாக இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாளை முதல் 23 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்