கைவிரித்த உயர்நீதிமன்றம்.. வேறு வழியில்லாமல் உச்சநீதிமன்றம் கதவை தட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு 4 இடங்களில் அடைப்பு இருப்பதை அடுத்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- புழல் சிறையில் செந்தில் பாலாஜி என்ன செய்கிறார்.? முதல் நாள் உணவு என்ன வழங்கப்பட்டது.? வெளியான தகவல்
இதனிடையே, சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானதே. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றார். மேலும், நீதிபதி பரதசக்ரவர்த்தியின் தீர்ப்போடு ஒத்துப்போகிறேன். செந்தில் பாலாஜி சட்டத்திற்குட்பட்டவர்தான் என நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியிருந்தார்.
இதையும் படிங்க;- எங்கள ஓபிஎஸ், இபிஎஸ் நினைச்சீங்களா! கலைஞரின் வளர்ப்பு! இதுக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்! உதயநிதி ஸ்டாலின்.!
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதெதாடர்பான விசாரணை விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது