'ஜவான்' படத்தில் ஷாரூக்கானுடன் ஐட்டம் டான்ஸ் ஆட பிரியா மணி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா?
'ஜவான்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட, நடிகை பிரியா மணி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், 'கண்களால் கைது செய்' படத்தின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கியவர் பிரியா மணி. இவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் வெற்றிபெறவில்லை என்றாலும்... நடிகர் கார்த்தி, இயக்குனர் அமீர் இயக்கத்தில் அறிமுகமான 'பருத்திவீரன்' படத்தில் முத்தழகு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தது இவருக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது.
Priyamani
தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடன், இந்தி போன்ற மொழிகளிலும் பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் பிரியா மணி. தமிழில் இழுத்து போத்தி கொண்டு நடித்தாலும், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அம்மணி கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டியதால் வாய்ப்புகளும் குவிந்தது.
30 வயதை கடந்த பின்னர் பிரியாமணிக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. ஆரம்பத்திலேயே சுதரித்தித்து கொண்ட பிரியா மணி, முஸ்தப்பா ராஜ் என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முஸ்தப்பா ராஜ் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மனைவியை, முறைப்படி விவாகரத்து செய்யாமல் பிரியாமணியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என கடந்த ஆண்டு, ஒரு பிரச்சனை வந்து ஓய்ந்தது.
எந்த பிரச்சனை பற்றியும் பெரிதாக அலட்டி கொள்ளாமல், திருமணத்திற்கு பின்னரும் வழக்கம் போல் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் பிரியா மணி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் 'கோடேஷன் கேங்' என்கிற படத்தில் நடித்துள்ளார். அதே போல் இரண்டு ஹிந்தி படங்களிலும், ஒரு கன்னட படமும் இவரின் கைவசம் உள்ளது.
40 வயதை எட்டிய பிறகும் படு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ப்ரியாமணி... இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருகான் - நயன்தாரா நடித்துள்ள 'ஜவான்' படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். ஷாரூக்கானுடன் சேர்ந்து, பிரியாமணி ஆட்டம் போட்டுள்ள இந்த ஒற்றை பாடலுக்கு, ரூபாய் 1 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.