- Home
- Cinema
- தொலைக்காட்சி
- 'கயல்' சீரியல் நடிகர் - நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆத்தாடி இவருக்கு தான் அதிகமாம்!
'கயல்' சீரியல் நடிகர் - நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆத்தாடி இவருக்கு தான் அதிகமாம்!
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய சீரியல்களில் ஒன்றான, 'கயல்' சீரியலில் நடிக்கும் நடிகர் - நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை விரும்பி பார்க்க கூடிய சீரியல்களில் ஒன்றாக உள்ளது கயல். இந்த சீரியல், கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது வரை ரசிகர்களின் ஆதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது. கயல் கதாபாத்திரத்தில், ஹீரோயினாக சைத்ரா ரெட்டி நடிக்க... ஹீரோவாக 'ராஜா ராணி' சீரியல் பிரபலமான சஞ்சீவ் நடித்து வருகிறார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். தன்னுடைய தம்பியின் குடும்பம் நாசமாக வேண்டும் என நினைக்கும் பெரியப்பாவின் சூழ்ச்சிகளை முறியடித்து, ஒவ்வொரு முறையும் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் கதாநாயகி கயல், என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் இயக்கி வருகிறார் இயக்குனர்.
தற்போது இந்த சீரியலில் கயல், எழிலின் காதலை ஏற்றுக்கொள்வாரா? கயல் செய்த தவறுக்காக அவரை மன்னிக்க மனம் இன்றி, எழில் ஆர்த்தியை திருமணம் செய்து கொள்வாரா? என மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது.
.
சீரியல் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு மட்டும், 25,000 ரூபாய் சம்பளமாக பெருகிறாராம்.
இவரை தொடர்ந்து, எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவ்... ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. கதாநாயகியை விட இவர் குறையாகவே சம்பளம் பெறுகிறார்.
விக்னேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி, மற்றும் அவருக்கு ஜோடியாக தேவி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ஆகியோர் 8,000 முதல் 10,000 வரை சம்பளமாக பெறுகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும், காமாட்சி, மூர்த்தி, தனம், தர்மலிங்கம், ஆகிய பிரபலங்கள் ஒரு நாளைக்கு 15,000 வீதம் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் சில காட்சிகளில் மட்டுமே நடிப்பதால் அவர்களுக்கு 10,000 ரூபாயை விட சம்பளம் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.