20 வயசு இளம் ஹீரோயின் போல் இருக்கும் ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் பிறந்தநாள் போட்டோஸ்
நடிகையும், விஜயகுமாரின் செல்ல மகள் ரூபிக்காவின் 7-ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளின் மகள்களான வனிதா, ப்ரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர், திருமணத்திற்கு முன்பு திரையுலகில் ஹீரோயின்களாக நடித்திருந்தாலும், திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகி, குழந்தை, குடும்பம், கணவர் என செட்டில் ஆகி விட்டனர்.
இதில் விதிவிலக்கு என்றால் நடிகை வனிதா விஜயகுமார் தான். இவரும் திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய நிலையில், இரண்டு முறை விவாகரத்து, குடும்ப சண்டை போன்ற விஷயத்தில் சிக்கி மீண்டு... குழந்தைகளை, ஒரு தனி பெண்ணாக இருந்து வளர்க்க வேண்டும் என்கிற சூழ்நிலைக்காக திரையுலகில் மீண்டும் என்ட்ரி கொடுத்து குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
அதே போல் சமீபத்தில் ப்ரீத்தா, கணவர் ஹரியுடன் இணைந்து, டப்பிங் ஸ்டூடியோ துவங்கிய நிலையில்... விரைவில் ஸ்ரீ தேவியும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம் அவ்வப்போது ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் போட்டோ ஷூட் எடுத்து அதனை வெளியிட்டு வருகிறார்.
மேலும் குழந்தை பெற்ற பின்பும் கூட, 20 வயது இளம் நடிகை போல் இருக்கும் ஸ்ரீதேவிக்கு... இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சர்யப்படுத்தியுள்ளது அவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸ்.
பேசலன்னா என் பொண்ணு வாய்லயே குத்துவா...கமலிடம் பேசிய ரோபோ சங்கர்!!
ஸ்ரீதேவி கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்கிற தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு 2016 ஆம் ஆண்டு ரூபிக்கா என்கிற மகள் பிறந்தார். இந்நிலையில் தன்னுடைய மகள் ரூபிக்காவின் 7-ஆவது பிறந்தநாள் புகைப்படங்களை இவர் வெளியிட, உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.