பேசலன்னா என் பொண்ணு வாய்லயே குத்துவா...கமலிடம் பேசிய ரோபோ சங்கர்!!
தீவிர உடல் நல பிரச்சனைக்குப் பின்னர் உடல் நலம் தெரியுள்ள, ரோபோ சங்கருக்கு போன் செய்து அவருடைய உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான உலக நாயகன் கமல்ஹாசன்.
'அசத்தப்போவது யாரு', 'கலக்கப்போவது யாரு', போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மிகவும் பிரபலமானவர் ரோபோ சங்கர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரோபோ சங்கர் மிகவும் உடல் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார்.
ரசிகர்கள் பலரும் அவருக்கு என்ன ஆனது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், முதலில் படத்தில் நடிப்பதற்காக ரோபோ சங்கர் உடல் எடை குறைத்ததாக கூறப்பட்டது. பின்னர் அவருடைய மனைவி, பிரியங்கா... ரோபோ சங்கருக்கு, கடந்த ஆறு மாதமாக மஞ்சள் காமாலை இருந்து வந்ததாகவும், ஆரம்பத்தில் கவனிக்காததால் ரத்தத்தில் கலந்து விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். ஆறு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த ரோபோ சங்கர், தற்போது தான் மெல்ல மெல்ல உடல் நலம் தேறி உள்ளார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளிலும், படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
அடேங்கப்பா... 'ஜவான்' படத்திற்காக ஷாருகான் - நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
தன்னுடைய உடல்நலம் மிகவும் மோசமாக முக்கிய காரணம் குடிப்பழக்கம் தான் என்பதை, ரோபோ சங்கர் வெளிப்படையாக கூறியது மட்டுமின்றி, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் தன்னுடைய தந்தை போல் யாரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்று உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார்.
'மாமன்னன்' படத்தில் வடிவேலு நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ள ரோபோ சங்கர், வழக்கம்போல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகள் மற்றும் மனைவியுடன் டான்ஸ் ஆடி ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு கலாய்ப்பு மூட்டி வரும் நிலையில், ரோபோ சங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், போன் செய்து அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார் உலக நாயகன் கமலஹாசன். மிகவும் அக்கறையாக உடல் நலத்தை பார்த்துக் கொள்ளும்படியும், கட்டிங் எல்லாம் இனிமேல் வேண்டாம் என கமல் கூற, இனிமே கட்டி எல்லாம் ஒன்றும் கிடையாது சார். அப்படியே இருந்தா கூட வீட்ல இருக்கிறவங்களையும் கூட்டிட்டு தான் போகணும் போல என்று காமெடியாக ரோபோவும் பதிலளித்துள்ளார். மேலும் மனைவி தன்னை நன்றாக கவனித்து வருவதாகவும், வேலா வேலைக்கு சாப்பாடு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.
அதேபோல் ஏற்கனவே தன்னுடைய மகளின் திருமணம் குறித்து உங்களிடம் கூறி உள்ளேன். இன்னும் ஆறு மாதத்தில் அவருடைய திருமணம் நடைபெற உள்ளதாகவும், ஆனால் திருமண தேதி குறித்து தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை. கண்டிப்பாக உங்களுக்கு கூறிவிட்டு தான் எதையும் செய்வேன் என ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கரின் மனைவியிடமும் பேசிய கமலஹாசன், ரோபோ சங்கரின் வருங்கால மாப்பிள்ளை மற்றும் இந்திரஜாவிடமும் பேசினார். அப்போது ரோபோ சங்கர் காமெடியாக எல்லாரிடமும் பேசிவிட்டு என் பொண்ணு கிட்ட பேசலனா அவ என் வாயிலே குத்துவா என கூறியது கலகலப்பை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் ரோபோ சங்கரிடம் உடல்நலம் பற்றி விசாரித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.