அடேங்கப்பா... 'ஜவான்' படத்திற்காக ஷாருகான் - நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
'ஜவான்' படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின், உதவியாளராக இருந்து 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், இயக்குனர் அட்லீ. முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை பதிவு செய்த அட்லீ அடுத்தடுத்து தளபதி விஜய்யை வைத்து, மூன்று திரைப்படங்களை இயக்கினார்.
அந்த வகையில் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்கள் ஒரு சில காப்பி சர்ச்சையில் சிக்கினாலும், வசூலில் சக்க போடு போட்டது. 'பிகில்' படத்திற்கு பின்னர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதை உறுதி செய்த அட்லீ, அவருக்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்தார்.
Photo Courtesy: Instagram
ஒருவழியாக தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியுள்ள 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த டீசர் ஒரே நாளில்.. அதாவது 24 மணிநேரம் 112 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனையை படைத்தது.
இந்த படத்தை அட்லீ மிகவும் நேர்த்தியான ஆக்சன் காட்சிகளோடு, செதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே கண்டிப்பாக 'ஜவான்' திரைப்படமும், ஷாருக்கானின் முந்தய படமான 'பதான்' படத்தை போல், ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணையும் என அடித்து கூறுகிறதாம் படக்குழு.
'மாமன்னன்' படத்தில் வடிவேலு நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
இந்நிலையில் இந்த படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் ஷாருக் கான் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அட்லீ இப்படத்திற்காக சுமார் 40 கோடி வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படும் நிலையில், நயன்தாரா, இதுவரை இல்லாத அளவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அதேபோல் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய தயாரிப்பில் நடித்துள்ளதால், வழக்கத்தை விட சற்று குறைவாகவே.. அதாவது 100 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.