MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இவர் தான் இலியானாவின் காதலரா? ஒருவழியா குழந்தை பிறக்கும் முன் கர்ப்பத்திற்கு காரணமானவர் முகத்தை காட்டிய நடிகை!

இவர் தான் இலியானாவின் காதலரா? ஒருவழியா குழந்தை பிறக்கும் முன் கர்ப்பத்திற்கு காரணமானவர் முகத்தை காட்டிய நடிகை!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை இலியானா, தற்போது முதல் முறையாக தன்னுடைய காதலரின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இவர் காதலருடன் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 17 2023, 03:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நடிகை எமி ஜாக்சன் எப்படி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டாரோ... அதே பாணியில், நடிகை இலியானாவும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். எனவே ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் உங்களுடைய காதலர் யார் என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதற்கு பதில் கொடுக்கும் விதமாக முதல் முறையாக தன்னுடைய காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இலியானா.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'தேவதாசு' என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக தன்னுடைய கெரியரை துவங்கியவர் இலியானா. தமிழில் அதே ஆண்டு வெளியான 'கேடி' திரைப்படத்தில் தமன்னாவுடன் இணைந்து நடித்திருந்தார்.  ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், ஒரு ஹீரோவுக்காக போட்டி போடும் இரண்டு ஹீரோயின்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் தமன்னா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க, இலியானா பாசிட்டிவ்வான ரோலில் ரவி கிருஷ்ணாவின் காதலியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியதால், தமன்னா மற்றும் இலியானா ஆகிய இருவருக்குமே தமிழ் திரையுலகில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

அடேங்கப்பா... 'ஜவான்' படத்திற்காக ஷாருகான் - நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
 

37

எனினும் தமன்னா அடுத்தடுத்து கல்லூரி, வியாபாரி, போன்ற சில படங்களில் தமிழ் படங்களில் நடித்தாலும், இலியானா தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்தார்.  நீண்ட இடைவேளைக்கு பின்னர், தளபதி விஜய்க்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட 'நண்பன்' படத்தில், ஹீரோயினாக நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த போதிலும், அந்த சமயத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதால்... தென்னிந்திய படங்களை தவிர்த்தார்.
 

47

இலியானா கடந்த சில வருடங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்த நிலையில், அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இந்த ஜோடி திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2019 ஆம் ஆண்டு, பிரிந்தனர். இவருடனான பிரிவுக்கு பின்னர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி, இதற்கான மருந்துகள் எடுத்து கொண்டதால், குண்டாக மாறியதாக இலியானா சில பேட்டிகளில் தெரிவித்தார்.

TRP-யில் படுமோசம்.. புதிய சீரியல்கள் வரவால் அதிரடியாக முடிவுக்கு வரும் ரசிகர்களின் ஃபேவரட் விஜய் டிவி தொடர்!
 

57
Ileana D cruz

Ileana D cruz

காதல் தோல்வியில் இருந்து மீண்டு, மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கிய இலியானா..  நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் செபஸ்டியனை காதலித்து வருவதாகவும் அவருடன் அவ்வபோது வெளிநாடுகளில் டேட்டிங் செய்வதாகவும் கூறப்பட்டது.   சமீபத்தில் குழந்தையின் ஆடை மற்றும் அம்மா என பெயர் எழுதிய டாலர் செயின் புகைப்படங்களை வெளியிட்டு , கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார்.

67

திருமணத்திற்கு முன்பே இலியானா கர்ப்பமாக ஆனது, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், கத்ரினா கைப் சகோதரர் தான் உங்கள் உங்கள் குழந்தையின் தந்தையா என பலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அவ்வப்போது தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இலியானா வெளியிட்டுவந்தாலும் , ஒரு முறை ஓட காதலர் முகத்தை காட்டியது இல்லை.

60 வயதிலும் குறையாத காதல்.. சரத்குமார் பிறந்தநாளுக்கு முத்த மழை பொழிந்து வாழ்த்து கூறிய ராதிகா! போட்டோஸ்!
 

77

ஆனால் தற்போது அந்த சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணமான அந்த காதலர் யார் என்பதை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். காதலருடன் டேட் நைட்டின் போது எடுத்துக்கொண்ட போட்டோசை. ஆனால். அவர் பெயர் என்ன என்பது பற்றி எந்த தகவலையும் வெளியிடாத நிலையில் ரசிகர்கள்... நெட்டிசன்கள் அவரின் புகைப்படத்தை வைத்து, அந்த நபர் யார் என்பது பற்றிய தேடல்களை துவங்கி உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பாலிவுட்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved