60 வயதிலும் குறையாத காதல்.. சரத்குமார் பிறந்தநாளுக்கு முத்த மழை பொழிந்து வாழ்த்து கூறிய ராதிகா! போட்டோஸ்!
நடிகர் சரத்குமார் இன்று தன்னுடைய 69-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில்... அவருக்கு முத்த மழை பொழிந்து ராதிகா வாழ்த்து கூறிய போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த், சத்யராஜ் வரிசையில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக மாறியவர் நடிகர் சரத்குமார். கோலிவுட் திரையுலக ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார், இன்று தன்னுடைய 69-ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். கணவரின் பிறந்தநாள் குறித்த சில அரிய புகைப்படங்களை ராதிகா வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சரத்குமார் ஒரு பத்திரிக்கையாளராக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் பாடி பில்டர், நடிகர் என அடுத்தடுத்த பரிமாணங்களில் தன்னை மெருகேற்றிக் கொண்டவர். இவர் வில்லனாக நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்படி இவர் நடிப்பில் வெளியான புலன்விசாரணை, சேரன் பாண்டியன், நட்புக்காக, சூரியவம்சம், நாட்டாமை, ரகசிய போலீஸ், கம்பீரம், காஞ்சனா, போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.
ஸ்ரீலங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
சரத்குமார் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு வரலட்சுமி - பூஜா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். வரலட்சுமி தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த சாயாதேவியை சரத்குமார் 2000 ஆம் ஆண்டு, விவாகரத்து பெற்று பிரிந்தார். நடிகர் சரத்குமாருக்கு நக்மாவுடன் ஏற்பட்ட காதல் தான் இவர்களின் திருமண முறிவுக்கு காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு, ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார்.
ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் எனும் நிகழ்ச்சியை சரத்குமார் தொகுத்து வழங்கிய போது, ராடான் நிறுவனத்தின் உரிமையாளரான நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாற, திருமணத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் 2004 ஆம் ஆண்டு ராகுல் என்கிற மகன் ஒருவரும் பிறந்தார்.
இந்நிலையில் நடிகர் சரத்குமார் இன்று தன்னுடைய 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ராதிகா தன்னுடைய கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, 60 வயதிலும் மிகவும் ரொமான்டிக்காக முத்தமழை பொழிந்த புகைப்படங்களை ஷேர் செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் நடிகர் சரத்குமாருக்கு பலர் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'போர் தொழில்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.