MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மாஸ், குடும்பம், போலீஸ் ஆக்ஷன்… ‘சிங்கம்’ ரிட்டர்ன்ஸ்! சூர்யாவின் அடுத்த 3 படங்கள் ரசிகர்களுக்கு திருவிழா!

மாஸ், குடும்பம், போலீஸ் ஆக்ஷன்… ‘சிங்கம்’ ரிட்டர்ன்ஸ்! சூர்யாவின் அடுத்த 3 படங்கள் ரசிகர்களுக்கு திருவிழா!

சூர்யா ரசிகர்களுக்கு 2026 ஆண்டு மிகப்பெரிய திரை கொண்டாட்டமாக மாறப்போகிறது. பாக்ஸ் ஆபீஸில் புதிய அத்தியாயத்தை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 02 2026, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்
Image Credit : Google

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்

தமிழ் சினிமாவில் நீண்ட நாளாக பெரிய திரை வெற்றிக்காக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இப்போது உண்மையான திருவிழா காலம் தொடங்கப் போகிறது. ஒரு கடும் பசியோடு இருந்தவருக்கு சாப்பாடு நிரம்பிய விருந்து கிடைத்த மாதிரி, அடுத்தடுத்த படங்களின் லைன் அப் சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தான் கூற வேண்டும். மாஸ், குடும்பம், போலீஸ் ஆக்ஷன் என மூன்று விதமான ஜானர்களில் சூர்யாவின் திரைப்படங்கள் திரையரங்குகளை அடையத் தயாராக உள்ளது.

25
கருப்பு
Image Credit : X

கருப்பு

முதலில் வெளியாகிறது ‘கருப்பு’. ஏப்ரல் அல்லது மே மாத ரிலீஸ் போன்ற தகவல்கள் உறுதியாகக் கொண்டிருக்கின்றன. இது முழுக்க முழுக்க கமெர்ஷியல் எண்டர்டெய்னராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் ஒரு சக்திவாய்ந்த கேரக்டரில் சூர்யாவை பார்க்கலாம். ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் வருவது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

Related Articles

Related image1
நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்..! குப் என்று வாடை அடித்ததாக நக்கீரன் கோபால் கடும் குற்றச்சாட்டு
Related image2
விஜய் - ராஷ்மிகா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க 'கியூ-ஆர்' கட்டாயம்! ராணுவக் கட்டுப்பாட்டில் பிரம்மாண்ட வரவேற்பு.!
35
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
Image Credit : X

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

அடுத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ். ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. வெளியான போஸ்டர் குடும்ப பின்னணியை சுட்டிக்காட்டுகிறது. அதனால் இது குடும்பங்கள் சேர்ந்து பார்க்கக்கூடிய எமோஷனல் டிராமாவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. மாஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல குடும்ப ரசிகர்களையும் திரையரங்குக்கு அழைக்கும் வகையில் படம் அமையும் என்று கூறப்படுகிறது. லக்கி பாஸ்கர் வெற்றிக்கு பின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

45
சூர்யா47
Image Credit : Onair Kerala, Zhagaram Studios

சூர்யா47

மேலும் ‘சூர்யா47’ படத்தை இயக்குனர் ஜீது மாதவன் இயக்குகிறார். ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற தரமான படங்களை வழங்கிய இயக்குநர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. இது போலீஸ் கதை என்ற தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் உண்மையானால், சூர்யா மீண்டும் ஒரு வலுவான ஆக்ஷன் அவதாரத்தில் தோன்ற வாய்ப்பு உள்ளது. 2026 இறுதி அல்லது பொங்கல் ரிலீஸ் என்ற கணிப்பும் உள்ளது.

55
சூர்யா மாஸ் கம்பேக்
Image Credit : Zhagaram Studios, Netflix

சூர்யா மாஸ் கம்பேக்

மொத்தத்தில் பார்க்கும்போது, ​​மாஸ், குடும்பம், ஆக்ஷன் என மூன்று திசைகளில் நகரும் இந்த லைன் அப், சூர்யாவின் பாக்ஸ் ஆபீஸ் பயணத்திற்கு புதிய துவக்கமாக அமையலாம். ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்த அந்த பெரிய வெற்றி, இந்த படங்களின் மூலம் மீண்டும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
சூர்யா 45
திரைப்படம்
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் - ராஷ்மிகா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க 'கியூ-ஆர்' கட்டாயம்! ராணுவக் கட்டுப்பாட்டில் பிரம்மாண்ட வரவேற்பு.!
Recommended image2
வித் லவ் முதல் தாய் கிழவி வரை... பிப்ரவரியில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் மூவீஸ் இதோ
Recommended image3
விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியாவின் கார்... டயர் பஞ்சரானதால் பறிபோன உயிர்..!
Related Stories
Recommended image1
நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்..! குப் என்று வாடை அடித்ததாக நக்கீரன் கோபால் கடும் குற்றச்சாட்டு
Recommended image2
விஜய் - ராஷ்மிகா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க 'கியூ-ஆர்' கட்டாயம்! ராணுவக் கட்டுப்பாட்டில் பிரம்மாண்ட வரவேற்பு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved