- Home
- Cinema
- Kara Movie Day 2 Box Office: கலெக்ஷன் கிங் ஆக மாறிய ‘கர’சாமி... முதல் நாளைவிட அதிக வசூல் அள்ளி சாதனை
Kara Movie Day 2 Box Office: கலெக்ஷன் கிங் ஆக மாறிய ‘கர’சாமி... முதல் நாளைவிட அதிக வசூல் அள்ளி சாதனை
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, சூரஜ், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் கர படத்தின் வசூல் நிலவரத்தை இங்கே பார்க்கலாம்.

Dhanush Kara Movie
விவசாயிகளின் பிரச்சினைகளையும், லோன் பெயரில் வங்கிகள் செய்யும் அநியாயங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நல்ல எமோஷனல் டிராமாவாக கர அமைந்துள்ளது. படத்தின் கதைப்படி, கரசாமி (தனுஷ்) ஒரு திருடன். எம்.எல்.ஏ வீட்டில் திருடும்போது மாட்டிக்கொள்கிறான். டி.எஸ்.பி பிரபாகரன் (சூரஜ் வெஞ்சரமூடு) இந்த கேஸை விசாரிக்கிறார். ஆனால், கரசுவாமி ஸ்டேஷனிலிருந்தே அவரை அடித்துவிட்டு தப்பிக்கிறான். இனி திருடக்கூடாது என முடிவெடுத்து, மனைவி செல்லி (மமிதா பைஜு) உடன் ஹோட்டலில் வேலை பார்க்கிறான். ஆனால், சொற்ப வருமானத்தில் மெஸ் தொடங்க வங்கியில் லோன் கேட்க, நிலப் பத்திரம் கேட்கிறார்கள்.
சொந்த ஊருக்குப் போனால், அப்பா கந்தசாமி (கே.எஸ்.ரவிக்குமார்) அந்தப் பத்திரத்தை வைத்து டிராக்டர் லோன் வாங்கியிருப்பது தெரிகிறது. போர் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிக்கிறது. லோன் கட்டமுடியாததால் வங்கி நிலத்தை ஜப்தி செய்கிறது. இந்த அதிர்ச்சியில் அப்பா இறந்துவிட, சொந்த நிலத்தில் அவரை அடக்கம் செய்யக்கூட வங்கி அனுமதிக்கவில்லை. கடனை அடைத்தால் மட்டுமே நிலம் திரும்பக் கிடைக்கும் என்ற நிலையில், கரசுவாமி என்ன செய்தான் என்பதே கதை.
கர படம் எப்படி இருக்கு?
கரசாமியாக தனுஷ் வாழ்ந்திருக்கிறார். படம் முழுக்க தனுஷ் தெரியவில்லை, அந்த கதாபாத்திரம்தான் தெரிகிறது. திருடனாக, மகனாக, கணவனாக நடிப்பில் மிரட்டியுள்ளார். மமிதா பைஜு, டீ-கிளாமர் லுக்கில் யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார். அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் வரும் காட்சிகள் கண்கலங்க வைக்கின்றன. போலீஸ் அதிகாரியாக சூரஜ் வெஞ்சரமூடுவின் நடிப்பு அபாரம். ஆரம்பத்தில் சீரியஸாகவும், பின்னர் கொஞ்சம் காமெடியாகவும் வரும் இவரது பாத்திரம் ரசிக்க வைக்கிறது. வங்கி மேலாளராக ஜெயராம் சிறப்பாக நடித்துள்ளார்.
கர படத்தின் ப்ளஸ் என்ன?
தேனி ஈஸ்வரின் கேமரா, 1990-களின் காலகட்டத்தை கண்முன் நிறுத்துகிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்திற்குப் பெரிய பலம். ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக இருந்திருக்கலாம். முள்ளை முள்ளால் எடுக்கும் கான்செப்டை விறுவிறுப்பாகக் கொடுத்ததில் இயக்குனர் விக்னேஷ் ராஜா வெற்றி பெற்றுள்ளார். சமூக அக்கறையுள்ள ஒரு நல்ல படமாக இந்த கர அமைந்துள்ளது.
கர படத்தின் வசூல்
சாக்னில்க் தளத்தின் தரவுகளின்படி கர திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 6.20 கோடி வசூலித்து இருந்தது. இதையடுத்து இரண்டாவது நாளான நேற்று மே 1, உழைப்பாளர் தினம் என்பதால், படத்தின் வசூல் முதல் நாளை விட அதிகரித்து உள்ளது. அதன்படி கர திரைப்படம் இரண்டாம் நாளில் ரூ.6.95 கோடி வசூலித்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் மட்டும் இப்படம் இரண்டு நாட்களில் 13.15 கோடி வசூலித்துள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் இரண்டு நாட்களில் ரூ.5 கோடி வசூலித்து ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.18.15 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது கர. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

