MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனுஷை காப்பாற்றியதா 'கர'? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

தனுஷை காப்பாற்றியதா 'கர'? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Kara movie day 1 box office collection: நடிகர் தனுஷ் நடிப்பில், நேற்று வெளியான 'கர' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 01 2026, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ்:
Image Credit : Instagram

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ்:

தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ற திரைப்படங்களை தேர்தெடுத்து நடிக்க கூடிய நடிகர் தான் தனுஷ். கடைசியாக 'இட்லி கடை' என்கிற படத்தை இயக்கி, தானே ஹீரோவாகவும் நடித்த இவர், தற்போது, போர் தொழில் படத்தின் மூலம் முதல் படத்திலேயே திரையுலகினரால் கவனிக்கப்பட்ட இயக்குனராக மாறிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் 'கர'. ஏப்ரல் 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) நேற்று வெளியானது.

26
கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது:
Image Credit : Instagram

கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது:

படத்தின் ரிலீசுக்கு முன்பே, 'கர' படத்தின் முன்பதிவுக்கு அமோக வரவேற்பு இருந்ததால், வசூல் ரீதியாக இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆனது முதலே ஒரு தரப்பினர் மத்தியில், பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

36
மமிதா பைஜு:
Image Credit : Asianet News

மமிதா பைஜு:

‘கர’ திரைப்படம் 1991 ராமநாதபுரம் பின்னணியில் உருவான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், மலையாள நடிகை மமிதா பைஜு ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ஜெயராம், கருணாஸ், சுராஜ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

46
வசூல் விவரம்:
Image Credit : Asianet News

வசூல் விவரம்:

நேற்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபீஸ் கணக்கீட்டுப்படி, இந்தியாவில் முதல் நாளில் ரூ. 5.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. நாடு முழுவதும் சேர்த்து, மொத்த வசூல் ரூ. 6.64 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் மட்டும் ரூ. 2.50 கோடி வசூல் செய்துள்ளது.

56
 மற்ற மாநிலங்களின் வசூல் விவரம்
Image Credit : Asianet News

மற்ற மாநிலங்களின் வசூல் விவரம்

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான 'கர' திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 4.75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இடங்களில் ரூ. 1.25 கோடியும், கர்நாடகா ரூ. 0.43 கோடியும், கேரளம் ரூ. 0.15 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ. 0.06 கோடி வசூல் செய்துள்ளது.

66
 தொடர்விடுமுறை:
Image Credit : Asianet News

தொடர்விடுமுறை:

மொத்தத்தில், படத்தின் முதலாவது நாள் வரவேற்பு நன்றாக உள்ளது. இன்று மே 1 தொழிலாளர் தினம் என்பதாலும், தொடர்விடுமுறை நாட்கள் வர உள்ளதாலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
மமிதா பைஜு
தமிழ் நடிகைகள்
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
26-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
Recommended image2
26-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
Recommended image3
கர்ப்பத்தையே கலைத்துள்ளார் - இசையமைப்பாளரால் பாலி*ல் தொல்லைக்கு ஆளான பாடகி! பிக்பாஸ் பிரபலத்தின் சகோதரியோ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved