வெட்கக்கேடு... நடிகை ஷகீலாவை பலான இடத்தில் தொட்டு பாலியல் தொந்தரவு செய்த மருத்துவர்! பளார் விட்ட சம்பவம்!
நடிகை ஷகீலா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மிகவும் மோசமான சம்பவம் குறித்து, யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது மட்டுமின்றி, அனைத்து துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
90-களில், முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர்களில் ஷகீலாவும் ஒருவர். குறிப்பாக மலையாளத்தில் இவரின் கவர்ச்சி நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. ஆபாசத்தை திணிக்காமல்... இவர் நடித்த கவர்ச்சி படங்கள் வெளியாகிறது என்றால், முன்னணி நடிகர்களான மம்மூட்டி - மோகன் லால் கூட தங்களின் படங்களை வெளியிட தயங்குவார்களாம். அதே போல் ஷகீலாவின் ஒரு சீன்னாவது தங்களின் படங்களில் இடம்பெற வேண்டும் என எண்ணிய இயக்குனர்களும் ஏராளம்.
ஆனால் இவருக்கு எதிராக பல்வேறு சதி நடக்க, இனி மலையாளத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என வாங்கிய அட்வான்ஸ் தொகை அனைதையும் திடீர் என திருப்பி கொடுத்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் இவருக்கான மார்க்கெட் சரிந்தது. அவ்வப்போது சில கவர்ச்சி வேடங்களில் தமிழ் படங்களில் தலை கட்டி வந்த ஷகிலாவுக்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட ஷகீலா, இந்த நிகழ்ச்சி மூலம் பலருக்கு அம்மாவாக மாறினார். சமீபா காலமாக பல்வேறு மொழிகளில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஷகீலா, தமிழில் யூடியூப் சேனல் ஒன்றில், பல பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து பேட்டி கண்டு வருகிறார். அதில் அவ்வப்போது தன்னை பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் எடுத்த பேட்டி ஒன்றில், தன்னிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர் குறித்து பேசியுள்ளார். தன்னுடைய அம்மாவிற்கு உடல்நலம் சரி இல்லை என மருத்துவமனைக்கு ஷகீலா அழைத்து சென்றுள்ளார். அப்போது மருத்துவர் எழுதிய எழுத்துக்கள் சரியாக புரியாததால் அதுபற்றி கேட்டுள்ளார். திடீர் என, ஷகீலாவின் பக்கத்தில் வந்த அந்த மருத்துவர், தொடரக்கூடாது இடத்தில் தொட்டு என்ன சந்தேகம் சொல்லு என கேட்டுள்ளார்.
அந்த மருத்துவரின் செயலால் உச்சகட்ட கோபமடைந்த ஷகீலா எதை பற்றியும் யோசிக்காமல் அந்த மருத்துவரை அறைந்ததோடு, பயங்கரமாக திட்டி அடி வெளுத்து வாங்கியுள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு வெளியே இருந்த செவிலியர் உள்ளே வந்து, ஷகீலாவை சமாதானம் செய்து அனுப்பினாராம். இந்த சம்பவத்தை கூறி, அணைத்து துறையிலும்... அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் உள்ளது என தெரிவித்துள்ளார் நடிகை ஷகீலா.