திருமணத்திற்கு பின் நடிகைகள் மீது காதல் வயப்பட்ட ரஜினி, கமல், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட 6 பிரபலங்கள்!
திருமணத்திற்கு பின்னர், நடிகைகள் மீது காதல் வயப்பட்ட முக்கிய பிரபலங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
திரைப்படங்களில் நடிக்க துவங்கி விட்டாலே நடிகர் - நடிகைகள் ஒரு சில விமர்சனங்களிலும், கிசுகிசு சர்ச்சையில் சிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதையெல்லாம் கடந்து ஒருவர் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் உள்ளார் என்றால், அது ஆச்சர்யப்பட கூடிய விஷயங்களில் ஒன்று தான். திருமணமத்திற்கு பின்னர் நடிகைகள் மீது, காதல் வயப்பட்ட 6 முக்கிய பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கமல்ஹாசன்:
ஆழ்வார் பேட்ட ஆண்டவரை பற்றி சொல்லவே வேண்டாம். திரைப்படத்திலும் காதல் மன்னன் தான், நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னன் தான். வாணி கணபதி என்கிற பரதநாட்டிய டான்சரை திருமணம் செய்து கொண்ட இவர், சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார். கமல் - வாணி பிரிய காரணமாக அமைந்தது கூட, சரிகாவுடன் கமல்ஹாசனுக்கு இருந்த உறவு என கூறப்பட்டது. பின்னர் பல நடிகைகளின் கிசுகிசுவில் சிக்கிய கமல் சரிகாவையும் விவாகரத்து செய்தார். கௌதமியுடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருந்த கமல் சில வருடங்களுக்கு முன் அவரிடம் இருந்தும் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
காமராஜர் பிறந்தநாளில் ஆரம்பமாகும் 'தளபதி விஜய் பயிலகம்'! நிர்வாகிகளுக்கு போடப்பட்ட முக்கிய உத்தரவு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:
ஒரு பஸ் கண்டக்டராக இருந்து, தன்னுடைய திறமையால் சூப்பர் ஸ்டார் என்கிற உச்சத்தை எட்டி பிடித்தவர் ரஜினிகாந்த். லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி, திருமணமத்திற்கு முன்பு கூட, சில காதல் தோல்விகளை சந்தித்தவர் தான். ஆனால் இவர் திருமணத்திற்கு பின்னர், தன்னுடன் இணைந்து நடித்த நடிகை அமலாவின் அழகில் மயங்கி, அவர் மீது காதல் மயக்கத்தில் சுற்றியதாகவும் அப்போது, ரஜினியின் குருவான பாலச்சந்தர், இதெல்லாம் வேண்டாம். உன் பெயர் கேட்டு போய்விடும் என ஆரம்பத்திலேயே அட்வைஸ் கொடுத்து அவரை மாற்றியதாக கூறப்படுகிறது.
பிரபு தேவா:
நடிகர் பிரபு தேவா, தன்னுடன் டான்ஸ் ஆடிய ரமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, 3 குழந்தைகளை பெற்ற பின்னர், மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன்பே நயன்தாராவுடன் சில வருடங்கள் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருந்தார். நயன்தாராவை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக மனைவியை விவாகரத்து செய்ய பிரபு தேவா முடிவு செய்த நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் நயன் - பிரபு காதலும் பிரேக்அப்பில் முடிந்தது. மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பல வருடங்கள் தனிமையில் வாழ்ந்த பிரபு தேவா கடந்த 2020 ஆம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிரை வாழ்க்கைக்கு ஜானி கொடுக்கும் ஐடியா! குணசேகரன் எண்ணம் ஈடேறுமா? விறுவிறுப்பான இன்றைய எபிசோட்!
கார்த்தி:
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் கார்த்தி. இவர் ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர், ராகினியின் தங்கையான ரதி என்பவரையும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரையும் விவாகரத்து செய்யாமல் இருவருடனும் தற்போது வரை வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனுஷ்:
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமான போது பல்வேறு விமர்சனங்களை சந்தித்தவர். ஆனால் அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்து எரிந்து, திரையுலகில் ஜெயிக்க திறமை தான் முக்கியம் என்பதை நிரூபித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ், திருமணத்திற்கு பிறகும் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் கொஞ்சி குலாவி வருவதும்... பால் நடிகையுடன் ஓவர் நெருக்கம் காட்டியதும் இவரின் திருமணம் உறவை விவாகரத்து வரை அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகிறாரா தேவயானியின் மகள் இனியா? வெளிப்படையாக தன் ஆசையை கூறிய இயக்குனர்!
கே.எஸ்.ரவிக்குமார்:
அட சார் நீங்களுமா? என பலருக்கும் இவரின் பெயர் இந்த லிஸ்டில் உள்ளது ஆச்சர்யமாக தான் இருக்கும். இவரும் ஒரு நடிகை மீது, காதல் வயப்பட்டு எந்த சேதாரமும் இல்லாமல் மீண்டுள்ளார். அதாவது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பாட்டாளி, படையப்பா, பஞ்சதந்திரம் போன்ற அடுத்தடுத்து படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனுடன் இவருக்கு நெருக்கம் அதிகரிக்க, இதனை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து அவரின் மனைவி அடக்கி விட்டாராம். எனினும் தலைவர் சில இடங்களுக்கு ரம்யாவுடன் ஜாலியாக டேட்டிங் சென்ற சம்பவல்களும் அரங்கேறி தான் உள்ளது.