ஆதிரை வாழ்க்கைக்கு ஜானி கொடுக்கும் ஐடியா! குணசேகரன் எண்ணம் ஈடேறுமா? விறுவிறுப்பான இன்றைய எபிசோட்!

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி... சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
 

Ethirneechal twist and turns today episode read details

சன் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல், கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கிறது.

அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை அடைய துடிக்கும் குணசேகரன் ஒருபக்கம், யாருக்கும் தெரியாமல் அப்பத்தாவின் சொத்தை, தன்னுடைய பெயருக்கு மாற்ற பிளான் போட்டு வரும் ஜீவானந்தம் மறுபுறம் இருக்க, குணசேகரனோ சொத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என, மற்றவர்கள் பெயரில் உள்ள அனைத்தையும் தன் பெயருக்கு மாற்றிக்கொண்ட சந்தோஷத்தில் உள்ளார்.

அதே நேரம் ஜானியின் நண்பனான கெளதம் தான் தற்போது ஜீவானந்தத்துக்கு உதவி செய்து வருகிறார். இக்கட்டான சூழ்நிலை என வந்தால் , கெளதம் ஜனனி பக்கம் நிற்பாரா? அல்லது ஜீவானந்தத்தின் பக்கம் நிற்பாரா என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இன்றைய ப்ரோமோவில், சமயலறையில் ரேணுகா, நந்தினி, ஆதிரை, ஜனனி ஆகியோர் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது... ஆதிரை - கரிகாலன் திருமணத்தை எதிர்த்து யாருக்கும் சம்மந்தம் இல்லாத ஒருவர் வழக்கு தொடர்ந்தால் கூட இந்த திருமணம் செல்லாது என கூறுகிறார் ஜனனி. இதற்க்கு நந்தினி அதனை நாமே செய்யலாமே என கூற... ஆதிரை அவ மனதில் என்ன நினைக்கிறாள் என்பது தெரிய வேண்டும் என ஜனனி கூறுகிறார்... அதிரை முதலில் நான் அருணை பார்க்க வேண்டும் என காதலோடு கூறுகிறார்.

Ethirneechal twist and turns today episode read details

விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகிறாரா தேவயானியின் மகள் இனியா? வெளிப்படையாக தன் ஆசையை கூறிய இயக்குனர்!

பின்னர் சமயலறைக்கு வரும் குணசேகரன், ஆதிரையின் முதலிரவு ஏற்பாடுகள் ஏன் செய்யவில்லை என நந்தினியிடம் விசாரிக்க, அதெல்லாம் செய்ய முடியாது என மூச்சியில் அடித்தது போல் பதில் கூறுகிறார். கரிகாலனோ, இவங்க எல்லாம் அப்போலேந்து இதையே தான் சொல்றாங்க என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த, ஆதிரை தனக்கு அவனை பிடிக்க வில்லை என கூறியதோடு யாராவது என்னை வற்புறுத்தினால் கழுத்தை அறுத்துக்கொள்வேன் என அருவாமனையை காட்டி பயமுறுத்துகிறார். 

Ethirneechal twist and turns today episode read details

போட்ரா வெடிய... இசை நிகழ்ச்சியில் ஒன்றினையும் யுவன் - சிம்பு! எங்கு.. எப்போது தெரியுமா?

பிடிவாத குணம் படைத்த குணசேகரன் அடுத்து என்ன செய்வார்? அதிரை ஆசைப்பட்டது போல் அருணை சென்று பார்பரா? ஜனனி ஒருவேளை இந்த திருமணம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் இந்த திருமணம் செல்லாது என தீர்ப்பு வருமா என பல்வேறு கேள்விகள் எழுவதால் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios