விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகிறாரா தேவயானியின் மகள் இனியா? வெளிப்படையாக தன் ஆசையை கூறிய இயக்குனர்!
பிரபல இயக்குனரும், தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் தன்னுடைய மகள், திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானால் விஜயின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை தேவயானி மும்பையில், பிறந்து வளர்ந்திருந்தாலும், இவர் சினிமாவில் கரை ஒதுங்கியது என்னவோ கோலிவுட் திரையுலகின் பக்கம் தான். தமிழில் 'தொட்டா சிணுங்கி' என்கிற படத்தில், கூடுதல் கவர்ச்சியை வெளிப்படுத்திய தேவயானி, அடுத்தடுத்த படங்களில் ஹோம்லி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
பார்ப்பதற்கு தமிழ் பெண் போலவே இருக்கும் கலையான இவரின் முகமும், கியூட் சிரிப்பும், எதார்த்தமான நடிப்பும் பல படங்களின் வாய்ப்பை பெற்று தந்தது. ஆரம்ப காலத்தில் இவர் தமிழ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சற்று தடுமாறினாலும், அஜித்துக்கு ஜோடியாக நடித்த 'காதல் கோட்டை' வெற்றியின் உச்சத்தில் அமரவைத்து.
இந்த படம் தேவயானிக்கு மட்டும் இன்றி, அஜித்தின் திரையுலக வாழ்க்கையிலும் தற்போது வரை ஒரு மாஸ்டர் பீஸ் எனலாம். இந்த படத்திற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருதை பெற்றார் தேவயானி. அதே போல் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதும் இவருக்கு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து தேவயானி நடிப்பில் வெளியான, சூரிய வம்சம், கிழக்கும் மேற்கும், நினைத்தேன் வந்தாய், பூந்தோட்டம், புதுமைப்பித்தன், பாட்டாளி, அப்பு, பிரண்ட்ஸ், போன்ற படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் இணைந்தது.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே... இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து 2001 ஆம் ஆண்டு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி கரம்பிடித்தார். இவருக்கு திருமணமான சில வருடங்கள் கழித்தே, மீண்டும் தேவயானியுடன் அவரின் பெற்றோர் பேச துவங்கினார்கள்.
திருமணத்திற்கு பின்னர் வெள்ளித்திரையில் இருந்து விலகிய தேவயானி, சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார். தற்போது வரை, அவ்வப்போது வெள்ளித்திரையில் தலை காட்டினாலும் சின்னத்திரை தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி, தன்னுடைய சொந்த ஊரில்... விவாசாயமும் செய்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக இருக்கும் தேவயானி - ராஜகுமாரன் தம்பதிகளுக்கு இனியா மற்றும் பிரியங்கா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். தேவயானியின் மூத்த மகள் இனியா கடந்த ஆண்டு தான் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில்... தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க சில இயக்குனர்கள் தேவயானியை அணுகியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தன்னுடைய மகளை திரையுலகில் ஹீரோயினாக அறிமுகப்படுத்துவது குறித்து தன்னுடைய ஆசையை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இயக்குனர் ராஜகுமாரன். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, தேவயானி - பார்த்திபன் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'நீ வருவாய் என' படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது, விஜய் தான். ஒரு சில காரணங்களால் விஜய்யால் நடிக்க முடியவில்லை.
அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளேன். இந்த படத்தில்... தன்னுடைய மகளை ஹீரோயினாக நடிக்க வைக்க உள்ளதாகவும், விஜய்யின் மகனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஜய் மகன் ஜோசன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்க விஜய்யை சில இயக்குனர்கள் அணுகிய போது, அவர் இயக்குநராகவேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளார். மேலும் எது செய்தாலும் அது அவரின் விருப்பம் தான் என கூறி உள்ள நிலையில், தேவயானி மகளுக்கு ஜோடியாக சஞ்சய் மாறுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே போல் இயக்குனர் ராஜகுமாரன் ’நீ வருவாய் என’ 2 படத்தின் ஸ்கிரிப்டை தாயார் செய்துவிட்டதாகவும் 10 பேரிடம் கதையை கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் மகன் ஒரு கேரக்டரிலும் மற்றொரு கேரக்டரில் இயக்குனர் விக்ரமனின் மக்ன் கனிஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.