TTF வாசனுக்கு விஜய் டிவி சீரியல் நடிகையுடன் திருமணமா? வைரலாகும் பத்திரிக்கை.. ஒருவழியா உண்மையை கூறிய நடிகை!
'மஞ்சள் வீரன்' படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள யூடியூபர் TTF வாசன், சீரியல் நடிகையை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே, தங்களுக்குள் இருக்கும் நடிப்பு , ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம், யூ டியூப்பில் பணம் சம்பாதிப்பது மட்டும் இன்றி, பட வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர் யூடியூப் சேனல்கள் மூலம் பிரபலமான பலர்.
இந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்துள்ளவர் தான் டிடிஎப் வாசன். அதிவேகமாக பைக் ஓட்டி அதனை வீடியோவாக எடுத்து, யூடியூப்பில் பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் 'மஞ்சள் வீரன்' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி உள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியாகி வைரலானது. குறைந்த நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இரவு - பகல் பாராமல் ஷூட்டிங் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டுள்ளது. மேலும் சமீபத்தில், இவர் சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில், இந்த விபத்து குறித்து வெளியான அவதூறான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இவர் போட்ட வீடியோவும் வைரலானது.
இந்நிலையில் TTF வாசனுக்கும், சீரியல் நடிகை சங்கீதா என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது. மேலும் திருமண பத்திரிக்கை ஒன்றும் வெளியானது. இதில் சங்கீதாவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக போடப்பட்டுள்ள விக்னேஷ் என்பது TTF வாசனின் பெயர் தான் என கூறப்பட்டது.
இந்த தகவலுக்கு அடித்து பிடித்து கொண்டு உண்மையை கூறியுள்ளார் சீரியல் நடிகை சங்கீதா. TTF வாசன் தன்னுடைய சகோதரரின் நண்பர் என்பது உண்மை தான். ஆனால், நான் திருமணம் செய்து கொள்ள உள்ள விக்னேஷ் என்பவர் வேறு ஒரு நபர். TTF வாசனுக்கும் இந்த திருமணத்திற்கும் துளியும் சம்மந்தம் இல்லை. TTF வாசன் தன்னுடைய சகோதரர் போன்றவர் என விளக்கம் கொடுத்துள்ளார்.
சங்கீதா விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி TTF வாசனுடன் இணைந்து வீடியோ போட்டு வந்ததால்... இப்படி ஒரு தகவல் வெளியானது. TTF வாசனுடன் சங்கீதாவுக்கு திருமணம் நடக்க வில்லை என்பது பொய் என்றாலும், உண்மையிலேயே சங்கீதாவுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அவரின் காதலரோடு திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Breaking: சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்திற்கு தடை கோரிய வழக்கு! உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!