அட்ரா சக்க அடித்து பிடித்து முதலிடத்தை தட்டி தூக்கிய பிரபல சீரியல்! டாப் 5 தொடர்களின் TRP லிஸ்ட் இதோ!
இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்ட, சீரியல்களில் ஒவ்வொரு வாரமும்... அதிக TRP-யை எந்த சீரியல் கைப்பற்றுகிறது என்பதை தெரிந்து கொள்ள தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வரிசையில் இந்த வாரம் டாப் 5 இடத்தை கைப்பற்றிய முக்கிய சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கடந்த மூன்று வாரங்களாக முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருந்த... எதிர்நீச்சல் சீரியலை இரண்டாம் இடத்திற்க்கு, தள்ளி மீண்டும் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர். சரி, எந்த சீரியல் முதல் டாப் 5 TRP லிஸ்டில் இடம்பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
கயல்:
கடந்து இரண்டு வாரங்களாக சற்று சரிவை சந்தித்து.. இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட கயல் சீரியல் இந்த வாரம் ஒருவழியாக, 11.14 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. தன்னுடைய அப்பா மறைவுக்கு பின்னர், முழு குடும்பத்தின் சுமையையும், தன் தோல் மீது சுமந்து நிற்கும் தைரியமான பெண்ணான கயலை சுற்றியே இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
எதிர்நீச்சல்:
ஆதிரையின் திருமணம் குறித்த எபிசோட் ஒளிபரப்பான போது, இதுவரை இல்லாத அலாவுக்கு TRP-யில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்த இந்த சீரியல், தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அப்பத்தாவின் 40 சதவீத சொத்தை... யாருக்கும் தெரியாமல் ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றி கொண்டு, குணசேகரனுக்கே அல்வா கொடுப்பாரா? என்கிற எதிர்பார்ப்புடன் தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த வாரம்... 10.88 புள்ளிகளுடன் TRP-யில் இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளது.
வானத்தை போல:
அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து, பல்வேறு திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தை போல. வெற்றியால் கடத்தப்பட்டு.. தண்ணீர் தொட்டிக்குள் பதுக்கி வைக்கப்பட்ட சின்ராசுவை ஊரெங்கும் அவரின் குடும்பத்தினர் தேடி வரும் நிலையில்.. இன்றைய தினம் காப்பாற்றுகிறார்கள். இந்த வாரம் முழுவதும் அழுகாச்சி சீன்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்... 9.87 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.
மிஸ்டர் மனைவி:
நடிகை ஷபானா நடித்து வரும் மிஸ்டர் மனைவி சீரியல் இந்த வாரம் TRP-யில் 9.73 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வாரம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நாயகியை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஹீரோ. எனினும் இவர்களின் வாழ்க்கைக்கு வில்லனாக என்னனென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.
இனியா:
நடிகை ஆல்யா மானசா மற்றும் ரிஷி நடித்து வரும், இனியா தொடர் இந்த வாரம் 9.58 புள்ளிகளுடன் TRP-யில் 5-ஆவது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. அக்காவே தன்னை தவறாக நினைக்க, தன்னை குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க இனியா நடத்தும் போராட்டமே கடந்த வாரம் ஒளிபரப்பானது.
விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகிறாரா தேவயானியின் மகள் இனியா? வெளிப்படையாக தன் ஆசையை கூறிய இயக்குனர்!