ஸ்ரீலங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு செல்லும் வழியில், ஸ்ரீலங்காவில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்த பின்னர், தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வந்த, 'லால் சலாம்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், முடிவடைந்த நிலையில்... தற்போது ரஜினிகாந்த் ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவுக்கு செல்வதாக கூறப்படுகிறது.
மாலத்தீவுக்கு செல்லும் வழியில், இலக்கை விமான நிலையத்திற்கு சென்ற தலைவருக்கு... விமான நிலையத்தில், உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ரஜினிகாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவை... தங்களின் அதிகார பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளது. ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் பேன்ட் அணிந்து தோளில் கருப்பு நிற பேக் ஒன்றை மாட்டியுள்ளார் . பொதுவாக, ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்த கையேடு, ஆன்மீக சுற்றுலா அல்லது தன்னுடைய பண்ணை வீட்டில் ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், இந்த முறை இயற்கையின் அழகை ரசிப்பதற்காக மாலத்தீவுக்கு செல்வது ரசிகர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான காவாலா லிரிகள் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிள் பாடலான ஹுக்கும் பாடல் ஜூலை 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.