Asianet News TamilAsianet News Tamil

விமானத்தில் திடீரென தீப்பிடித்த மொபைல் போன்கள்.. மொபைல் தீ பிடிப்பதற்கான காரணங்கள் என்ன?

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளின் மொபைல் சார்ஜர் தீப்பிடித்தது. போன்கள்  மற்றும் சார்ஜர்கள் தீப்பிடிப்பதற்கான 7 பொதுவான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

7 common reasons why phones/chargers catch fire
Author
First Published Jul 18, 2023, 1:37 PM IST

கடந்த உதய்பூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்படுவதற்காக டாக்ஸியில் பயணித்த ஒரு பயணியின் மொபைல் ஃபோனில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால், விமானம் உதய்பூர் விமான நிலைய முனையத்திற்கு எட்டு நிமிடங்களுக்குள் திரும்பியது என்று அந்த நபர் கூறினார். பிரச்சனைக்குரிய சார்ஜர் அகற்றப்பட்டது. சுமார் 40 நிமிடங்கள் கழித்து விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. 

கடந்த ஆண்டு இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், இண்டிகோவின் திப்ருகார்-டெல்லி விமானத்தில் பயணி ஒருவரின் மொபைல் போன் நடுவானில் தீப்பிடித்தது. விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ அதிகாரிகளின் கூற்றுப்படி, கேபின் குழுவினர் தீயை அணைக்கும் கருவியின் உதவியுடன் அதை அணைத்தனர்.

ஒரிஜினல் சார்ஜர்கள்

மூன்றாம் தரப்பு கேபிள்கள் மற்றும் சார்ஜர்களைப் பயன்படுத்துவதே ஸ்மார்ட்போன் தீ பிடிக்கவோ அல்லது வெடிக்கவோ முக்கிய காரணம். சான்றளிக்கப்பட்ட அதாவது ஒரிஜினல் சார்ஜர்களைப் பயன்படுத்த வேண்டும்.சார்ஜர்கள் மற்றும் அடாப்டர்களில் பணத்தை சேமிக்க வேண்டாம்.

தரமில்லாத பேட்டரி

ஸ்மார்ட்ஃபோன் தீ/வெடிப்புக்கான மற்றொரு பொதுவான காரணம் மூன்றாம் தரப்பை சேர்ந்த பேட்டரிகளைப் பயன்படுத்துவதாகும். பேட்டரிகள் சிதைவடையும். பல ஆண்டுகளாக, அவை சிதைந்து, அவற்றின் செயல்திறன் குறைகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், புதிய சாதனத்தைப் பயன்படுத்தவும் அல்லது நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் இருந்து அவற்றை மாற்றவும்.

பேட்டரி வீக்கம்

பேட்டரி வீங்கியிருப்பதையோ அல்லது பேட்டரி பகுதியைச் சுற்றி ஏதேனும் சேதம் ஏற்பட்டிருப்பதையோ நீங்கள் கண்டால், அது பேட்டரியை சேதப்படுத்தி, ஷார்ட் சர்க்யூட், அதிக வெப்பம் அல்லது கசிவு போன்றவற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. உடனே மாற்ற வேண்டும்.

படுக்கை அறையில் சார்ஜ்

சிலர் தொலைபேசியை சார்ஜருடன் இணைத்து, அதை படுக்கையில் அல்லது தலையணை கீழ் சார்ஜ் செய்வதற்காக விட்டுவிடுவார்கள். இது ஃபோன் சூடாகி தீ அல்லது ஷார்ட் சர்க்யூட் ஏற்படலாம்.

வெப்பநிலை

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட வெப்பநிலை வரம்பிற்கு ஃபோனின் பேட்டரி செயல்பாட்டை மதிப்பிடுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறுவது சேதங்கள் மற்றும் செயலிழப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் அதிக வெப்பம் காரணமாக தீ அல்லது வெடிப்பு ஏற்படலாம்.

சார்ஜ் 

ஸ்மார்ட்போன் ஆபத்துகளுக்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணம், சார்ஜ் செய்யும் போது தொலைபேசியைப் பயன்படுத்துவது. பெரும்பாலான ஃபோன்கள் சார்ஜ் செய்யும் போது சிறிது வெப்பமடைவதால், அதே நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவது அதிக வெப்பத்தை உருவாக்கும் என்பதால் இது நிகழ்கிறது.

தீ வெடிப்பு

எதையும் ஓவர்லோட் செய்வது மொபைல் போனை சேதப்படுத்தும். ஃபோனின் சிப் ஓவர்லோட் செய்யப்பட்டால், வெப்பநிலை உயரத் தொடங்குகிறது. எனவே ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்கள் சரியான முறையில் உபயோகிப்பது நல்லது.

வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

Follow Us:
Download App:
  • android
  • ios