Asianet News TamilAsianet News Tamil

72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரிப்பது சரியா? அமலாக்கத்துறை அலுவலகமா? சித்ரவதை கூடாரமா? வழக்கறிஞர் சரவணன்.!

ஆளுநர் ஆர்.என். ரவியை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி டார்க்கெட் செய்யப்படுகிறார். ஒரு வாரம் டெல்லி சென்று வந்தார். அடுத்த வாரம் அமலாக்கத்துறை சோதனை செய்கிறது.

dmk lawyer saravanan salms Enforcement Directorate
Author
First Published Jul 18, 2023, 12:33 PM IST

ஆளுநர் ஆர்.என். ரவியை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை என திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார். 

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.  சோதனை நிறைவு பெற்றதை அடுத்து சென்னை சைதாப்பேட்டை இல்லத்திலிருந்து நேற்று இரவு நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அதிகாலை 3.30 மணியளவில் விடுவிக்கப்பட்டார். 

இதையும் படிங்க;- புழல் சிறையில் செந்தில் பாலாஜி என்ன செய்கிறார்.? முதல் நாள் உணவு என்ன வழங்கப்பட்டது.? வெளியான தகவல்

dmk lawyer saravanan salms Enforcement Directorate

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக வழக்கறிஞர் சரவணன்;- விசாரணை நடத்துவதாக கூறி அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற  முறையில் நடந்து கொண்டது. அமலாக்கத்துறை அலுவலகமா, சித்தரவதைக்கூடமா? அமலாக்கத்துறையின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதிலளித்தார். களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமலாக்கத்துறை செயல்படுகிறது. சோதனையில் அமலாக்கத்துறையினரால் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. 

இதையும் படிங்க;-  அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை.. ஆனால்.. ட்விஸ்ட் வைத்த அமலாக்கத்துறை..!

dmk lawyer saravanan salms Enforcement Directorate

நமக்கே இவ்வளவு சோர்வாக இருக்கும் போது 72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரிப்பது மனித உரிமை மீறல். உச்சநீதிமன்ற எச்சரிக்கையை மீறி பொன்முடிக்கு மன உளைச்சல்  அளித்துள்ளது அமலாக்கத்துறை. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல் வழக்கு அமலாக்கத்துறைக்கு தெரியாதா? இன்று மாலை 4 மணிக்கு பொன்முடி மீண்டும் ஆஜராக சம்மன் கொடுத்துள்ளனர். ஆளுநர் ஆர்.என். ரவியை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி டார்க்கெட் செய்யப்படுகிறார். ஒரு வாரம் டெல்லி சென்று வந்தார். அடுத்த வாரம் அமலாக்கத்துறை சோதனை செய்கிறது என வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios