சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை தொடக்கம் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது. இதன் முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இலங்கையின் வடக்கு பகுதி தமிழர்களின் தாய்நிலப் பகுதியாகும். வடபகுதி யாழ்ப்பாணத்துக்கு செல்ல கொழும்பில் இருந்துதான் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.
2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள்- இலங்கை ராணுவம் யுத்தம் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாணத்தின் பலாலி விமான தளத்தை இந்தியா சீரமைத்தது. இந்தியாவின் இந்த சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2019-ல் செயல்பாட்டு வந்தது. இலங்கையின் 3-வது சர்வதேச விமான நிலையமான பலாலி அமைந்தது.
சென்னை- யாழ்ப்பாணம் பலாலி இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கடந்த வாரம் கொழும்புவில் நடந்த இந்திய டிராவல் ஏஜென்ட்ஸ் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வருகை தந்த ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சென்னை-யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை-யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் காலை 11.30 மணிக்கு யாழ்ப்பாணம் வந்து சேரும் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் ஏடிஆர்72 விமானம், மீண்டும் 12.30 மணிக்கு சென்னை புறப்படுகிறது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்