Published : Nov 14, 2023, 07:08 AM ISTUpdated : Nov 14, 2023, 11:45 PM IST

Tamil News Live Updates: மழைக்கு விடுமுறையா? அப்படினா சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!

சுருக்கம்

மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Tamil News Live Updates:  மழைக்கு விடுமுறையா? அப்படினா சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!

11:45 PM (IST) Nov 14

தலைவர் 171 ஷூட்டிங்கா? திடீரென விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்.. எங்கு போறாரு தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையம் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

11:09 PM (IST) Nov 14

உங்கள் ஐபோனின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஈஸியான டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க..

உங்கள் ஐபோனின் வேகத்தை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

10:50 PM (IST) Nov 14

கொட்டும் கனமழை.. திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு !!

கனமழை காரணமாக திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

10:27 PM (IST) Nov 14

புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்க ஐடியா இருக்கா.. இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்..

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை மாதந்தோறும் வளர்ந்து வருகிறது. அக்டோபர் 2023 இல் மொத்தம் 71,604 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதிகம் விற்பனையாகும் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

08:49 PM (IST) Nov 14

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு.. ஆம் ஆத்மி கட்சிக்கு பறந்த நோட்டீஸ்.. தேர்தல் ஆணையம் அதிரடி.!

சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளை கூறியதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

07:57 PM (IST) Nov 14

கனமழை எதிரொலி - சென்னை மாவட்டம் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு

நாளை(15.11.23) சென்னை மாவட்டம் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

07:36 PM (IST) Nov 14

சென்னையில் மேலாளரை அடித்து உதைத்த ரவுடிகள்.. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.. அண்ணாமலை ஆவேசம் | வைரல் வீடியோ

சென்னை திருமங்கலத்தில் பாதுகாப்பு பணம் தர மறுத்ததால் உணவக மேலாளரை ரவுடிகள் அடித்து உதைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

07:07 PM (IST) Nov 14

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பறிபோகிறது.. என்ன செய்கிறது திமுக அரசு.? கொந்தளித்த அண்ணாமலை..!

லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும்போது, அவர்களைப் புறக்கணித்து, அரசுப் பணிகளை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்க முயற்சிப்பதை, திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

05:22 PM (IST) Nov 14

இலங்கை நெருக்கடிக்கு ராஜபக்சே சகோரதர்களே காரணம்!

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோரதர்களே காரணம் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

05:08 PM (IST) Nov 14

டெஸ்லா தொழிற்சாலைக்கு பியூஷ் கோயல் விசிட்: மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

எலான் மஸ்கின் டெஸ்லா தொழிற்சாலையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பார்வையிட்டார்

 

04:09 PM (IST) Nov 14

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களை மீட்க எஸ்கேப் டனல் அமைக்கும் பணி தீவிரம்!

உத்தரகாண்ட் மாநில சுரங்க விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க எஸ்கேப் டனல் எனப்படும் சிறிய சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

 

03:30 PM (IST) Nov 14

ஜோவிகா ஆபத்தான ரிலேஷன்ஷிப்ல இருக்கா... வனிதா மகள் மீதுள்ள ஆதங்கத்தை பிக்பாஸ் வீட்டில் கொட்டிய விசித்ரா

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா ஆபத்தான நபர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளதாக பிக்பாஸ் போட்டியாளர் விசித்ரா கூறிய புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

03:23 PM (IST) Nov 14

மராத்தா இட ஒதுக்கீடு: இளைஞர் தற்கொலை!

மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

02:29 PM (IST) Nov 14

ஆசையோடு காத்திருந்த விக்கி.. அஜித்தை போல் கடைசி நேரத்தில் கழட்டிவிட்ட கமல் - எல்லாத்துக்கும் காரணம் பிரதீப்பா!

அஜித் படம் டிராப் ஆன பின்னர் கமல் தயாரிப்பில் படம் இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன், கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்டதன் ஷாக்கிங் பின்னணியை பார்க்கலாம்.

02:00 PM (IST) Nov 14

ம.பி. மக்களுக்கு அயோத்தி ராமர் கோயிலில் இலவச தரிசனம்: அமித் ஷாவுக்கு வலுக்கும் கண்டனம்!

மத்தியப்பிரதேச மக்களுக்கு அயோத்தி ராமர் கோயிலில் இலவச தரிசனம் என்ற அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருவதுடன், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது

 

01:48 PM (IST) Nov 14

யார கேட்டு காலைல 7 மணி ஷோ போட்டீங்க! திருப்பூர் சுப்ரமணியத்தின் தியேட்டர் மீது பாயும் நடவடிக்கை

திருப்பூர் சுப்ரமணியத்திற்கு சொந்தமான சக்தி சினிமாஸ் தியேட்டரில் அதிகாலை காட்சி திரையிடப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம்.

01:15 PM (IST) Nov 14

இலங்கையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு!

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது

 

01:03 PM (IST) Nov 14

இலங்கையில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

இலங்கையில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2ஆக பதிவாகியுள்ளது. 

01:00 PM (IST) Nov 14

SIP முதலீட்டில் ரூ.10 கோடி சம்பாதிப்பது எப்படி? இத பண்ணுங்க போதும்..!

SIP முதலீட்டில் 10 சதவீத வருடாந்திர அதிகரிப்புடன் ரூ.10 கோடி சேமிப்பு இலக்கை எவ்வாறு அடைவது என்பது பற்றி இங்கு காணலாம்

 

12:23 PM (IST) Nov 14

188 பைக்... 13 நாட்கள்... 234 தொகுதி: களமிறங்கும் திமுக ரைடர்ஸ் குழு - மாஸ் காட்டும் உதயநிதி!

திமுக இளைஞர் அணி மாநாட்டை ஒட்டி மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்

 

12:21 PM (IST) Nov 14

பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன ஐஷூவுக்கு இத்தனை லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதா? வெளியான ஷாக்கிங் தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட ஐஷூவுக்கு வழங்கப்பட்ட சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

12:08 PM (IST) Nov 14

நாட்டையே உலுக்கிய ஆலுவா சிறுமி கொலை வழக்கு... 26 நாட்களில் விசாரணை முடித்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கேரளாவில் கடந்த ஜூலை மாதம் 5 வயது சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு  தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  

11:41 AM (IST) Nov 14

ரெட் கார்டால் மாறிய வாழ்க்கை! கமல் கருணை காட்டாவிட்டாலும் பிரதீப்புக்கு பிரம்மாண்ட வாய்ப்பை வழங்கிய விஜய் டிவி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு தற்போது பிரம்மாண்ட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதாம்.

11:22 AM (IST) Nov 14

கேரளாவில் மாவோயிஸ்ட்கள் மீது துப்பாக்கிச் சூடு: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரளாவில் மாவோயிஸ்ட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கிடையே தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

 

11:22 AM (IST) Nov 14

சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு சேவை!

சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

 

11:21 AM (IST) Nov 14

மனைவியை பிரியும் ரேமண்ட் குழுமத் தலைவர் கவுதம் சிங்கானியா!

ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கவுதம் சிங்கானியா தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார்

 

10:31 AM (IST) Nov 14

பழைய பாடலை பட்டி டிங்கரிங் பார்த்து பயன்படுத்தியதால் வெடித்த சர்ச்சை... சிக்கலில் ஏ.ஆர்.ரகுமான்

கசி நஸ்ரூல் இஸ்லாம் எழுதிய பாடலை பிப்பா படத்தில் பயன்படுத்தியதால் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

09:49 AM (IST) Nov 14

அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்.. தட்டித்தூக்கிய போலீஸ்.!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் தொழில் நடத்தி வந்த பெண் உட்பட 3 பேரர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளளனர்.

09:39 AM (IST) Nov 14

குழந்தை நட்சத்திரமாக நடித்தே கோடீஸ்வரி ஆன சாரா! ஸ்கூல் படிக்கும்போதே விக்ரமின் ரீல் மகளுக்கு இத்தன கோடி சொத்தா

பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்த நடிகை சாரா அர்ஜுனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

08:47 AM (IST) Nov 14

கலாபவன் மணி மர்ம மரணத்தின் திடுக் பின்னணி

கலாபவன் மணி மரணம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

08:24 AM (IST) Nov 14

கனமழையால் தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற  இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பட்டயத் தேர்வுகள் நடைபெறும் தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:58 AM (IST) Nov 14

குட்நியூஸ்.. நவம்பர் 18ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு.!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்கார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

07:26 AM (IST) Nov 14

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தொடர்மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

07:16 AM (IST) Nov 14

சென்னையில் 542வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 542வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

07:15 AM (IST) Nov 14

கனமழை எச்சரிக்கை.! 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்ததெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

07:15 AM (IST) Nov 14

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய பகுதியில் 5 மணிநேரம் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


More Trending News