பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன ஐஷூவுக்கு இத்தனை லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதா? வெளியான ஷாக்கிங் தகவல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட ஐஷூவுக்கு வழங்கப்பட்ட சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Aishu
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் தான். கடந்த 2017-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 7வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஐஷூவும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். ஊட்டியை சேர்ந்த இவர், விஜய் டிவி நடன நிகழ்ச்சியில் நடனமாடி உள்ளார்.
Aishu Nixen
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி சினிமாவில் ஹீரோயினாக ஜொலிக்க வேண்டும் என ஆசைப்பட்டு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஐஷூ. இதில் முதல் இரு வாரங்கள் செம்ம டஃப் ஆன போட்டியாளராக இருந்து வந்தார் ஐஷூ. அதன்பின்னர் நிக்சன் உடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருக்கமானதை தொடர்ந்து விளையாட்டில் கோட்டைவிட்டு, லவ் டிராக்கில் பிசியானார் ஐஷூ.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Bigg Boss Aishu
நிக்சனுடன் நெருங்கி பழகிவிட்டு, தனக்கு ஏற்கனவே வெளியில் ஆள் இருப்பதாக கூறி ஐஷூ டபுள் கேம் ஆடியதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இவர் கண்டெண்ட்டுக்காக தான் லவ் செய்வது போல் நடிக்கிறாரா என்கிற சர்ச்சையும் எழுந்தது. இதனால் அவரை வெளியேற்ற முடிவெடுத்த ரசிகர்கள் கடந்த வாரம் அவருக்கு குறைவான வாக்குகளை அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் ஐஷூவை எவிக்ட் செய்தார் கமல்ஹாசன்.
Bigg Boss Aishu salary
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கும் ஐஷூவின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அவர் மொத்தம் 42 நாட்கள் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அவருக்கு ரூ.6 லட்சத்துக்கு 30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின்னர் ஐஷூ எந்தவித பதிவும் பதிவிடாமல் இருந்து வருவதால், அவருக்கு வீட்டில் செம்ம டோஸ் கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... ரெட் கார்டால் மாறிய வாழ்க்கை! கமல் கருணை காட்டாவிட்டாலும் பிரதீப்புக்கு பிரம்மாண்ட வாய்ப்பை வழங்கிய விஜய் டிவி