ரெட் கார்டால் மாறிய வாழ்க்கை! கமல் கருணை காட்டாவிட்டாலும் பிரதீப்புக்கு பிரம்மாண்ட வாய்ப்பை வழங்கிய விஜய் டிவி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு தற்போது பிரம்மாண்ட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதாம்.
Pradeep, Kamal
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக வலம் வந்தவர் பிரதீப் ஆண்டனி. இவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் திடீரென பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் கமல். பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினர்.
Pradeep antony
பிரதீப்பின் ரெட் கார்டு எவிக்ஷன் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே அவரை கமல் திட்டமிட்டு வெளியேற்றியதாக விவாதங்கள் நடந்தன. இந்த நிலையில், கடந்த வார இறுதியில் இதுகுறித்து விளக்கம் அளித்த கமல், பிரதீப்புக்கு பேச வாய்ப்பளித்தும் அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என சப்பைகட்டு கட்டிவிட்டு தான் சொன்னது நியாயமான தீர்ப்பு தான் என பேசிவிட்டு சென்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Pradeep Antony Red Card
அதேபோல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது விவாத பொருளாக மாறியதால் அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டுவருவார்கள் என்றும் பேச்சு அடிபட்டது. பிரதீப்பும் தனக்கு மற்றுமொரு வாய்ப்பு தந்தால் சிறப்பாக விளையாடுவேன் என ஓப்பனாகவே எக்ஸ் தளம் வாயிலாக கேட்டார். ஆனால் கமல் அவரை மீண்டும் நிகழ்ச்சிக்குள் கொண்டுவரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்ததால் இனி அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்பது உறுதியானது.
Bigg Boss Pradeep
சினிமாவில் படம் இயக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய கனவு என்றும், இந்த டைட்டில் ஜெயித்தால் தன்னால் இயக்குனராக முடியும் எனவும் பிரதீப் கூறி இருந்தார். ஆனால் தற்போது டைட்டில் ஜெயிக்க முடியாவிட்டாலும் அவரது இயக்குனர் கனவு விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பிரதீப்புக்கு விஜய் டிவி ஒரு ஜாக்பாட் வாய்ப்பை வழங்கி இருக்கிறதாம். ஹாட்ஸ்டாருக்காக ஒரு வெப் தொடர் இயக்க பிரதீப்பிடம் கதை கேட்டு இருக்கிறார்களாம். அதனை தயார் செய்யும் பணியில் தற்போது தீவிரமாக உள்ளாராம் பிரதீப். விரைவில் கதை சொல்லி அது அவரது சினிமா கனவை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கார்த்தியின் கையில் சிக்கிய தீபாவின் லெட்டர்.. கார்த்திகை தீபம் சீரியலில் காத்திருக்கும் செம்ம டுவிஸ்ட்