5 நிமிடங்களில் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் இருந்து துர்நாற்றத்தை ஈசியாக விரட்ட வழிகள் இதோ!
பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்களை சில நிமிடங்களிலே துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக மாற்றுவதற்கான எளிய வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை..

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாக்ஸில் தான் உணவு அடைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால், சில நாட்களுக்கு பிறகு அதிலிருந்து பிடிவாதமான கறைகள் மற்றும் துர்நாற்றம் வீச தொடங்குகிறது. எவ்வளவு தான் சோப்பு போட்டு கழுவினாலும் துர்நாற்றம் அடிக்கும். இந்த பிரச்சனையால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்களில் இருந்து வரும் துர்நாற்றத்தை எளிதில் போக்கக்கூடிய சில குறிப்புகள் இங்கே உள்ளன. அவை..
பேக்கிங் சோடா: பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து அதில் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸை 10 நிமிடம் வைத்து, பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவினால் உங்கள் குழந்தையின் லஞ்ச் பாக்ஸ் சுத்தமாகவும், வாசனை இல்லாமல் இருக்கும்.
உப்பு மற்றும் எலுமிச்சை: வெந்நீரில் 2 ஸ்பூன் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பிறகு அதில் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸை வைத்து 5 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் ஒரு பிரஷ் உதவியுடன் அதை சுத்தம் செய்தால் அதிலிருந்து துர்நாற்றம் போய்விடும்.
இதையும் படிங்க: Toilet Cleaning Tips : ஒரு பைசா கூட செலவில்லாமல் நொடியில் கழிப்பறையை சுத்தமாக பெஸ்ட் டிப்ஸ்!
வினிகர்: வினிகரை பயன்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் சில நிமிடங்களில் சுத்தம் செய்யலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில்
தண்ணீரில் ஊற்றி அதில் வினிகரில் கலந்து, அதனுள் லஞ்ச் பாக்ஸ் போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து, பிறகு சோப்பை கொண்டு சுத்தம் செய்தால் லஞ்ச் பாக்ஸில் இருந்து துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்.
இதையும் படிங்க: வெறும் 5 நிமிடத்தில் தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்ய சூப்பரான ஐடியாக்கள் இதோ!
காபி பொடி: லஞ்ச் பாக்ஸிலிருந்து துர்நாற்றத்தை நீக்க காபி பொடியை பயன்படுத்தலாம். இதற்கு, லஞ்ச் பாக்ஸில் காபி பொடியை தடவி, 5
நிமிடம் கழித்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் லஞ்ச் பாக்ஸில் இருந்து துர்நாற்றம் முழுவதுமாக நீங்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D