- Home
- Gallery
- நாசமா போ.. தற்கொலை பண்ணி செத்து போ! இல்ல அடிச்சே கொன்னுடுவாங்க! பயில்வான் மீது பயங்கர வெறியில் சுசித்ரா!
நாசமா போ.. தற்கொலை பண்ணி செத்து போ! இல்ல அடிச்சே கொன்னுடுவாங்க! பயில்வான் மீது பயங்கர வெறியில் சுசித்ரா!
பல பிரபலங்கள் பற்றி விமர்சித்து பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை... செத்து போயிடு, தற்கொலை பண்ணிக்கோ என பேட்டி ஒன்றில் தாக்கி பேசியுள்ளார் பாடகி சுசித்ரா.

Bayilvan Ranganathan
பிரபலங்களின் வாழ்க்கையை பற்றி கூறுகிறேன் என்கிற பெயரில்... பல ஜோடிக்கப்பட்ட தகவல்களை கூறி, கடந்த சில வருடங்களாகவே பல பிரபலங்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாகி வருபவர் பயில்வான் ரங்கநாதன். ராதிகா, ரேகா நாயர், விஷால் போன்ற பலர் இவரை மேடைகளில் கடுமையாக திட்டி தீர்த்த போதிலும் தன்னுடைய விமர்சனத்தை தொடர்ந்து வருகிறார்.
கடந்த வாரம் பயில்வான் ரங்கநாதன், குழலி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் ஷகிலாவும் பங்கேற்றார். அப்போது ஊரில் உள்ள பிரபலங்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பற்றி பேசும் உங்களுடைய கடைசி மகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? என்றும்... அவர் யாரை காதலிக்கிறார் என்பது தெரியுமா? என ரைட் அண்ட் லெப்ட் வாங்கிய ஷகிலா.. அவர் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், இது எனக்கு நெருக்கமானவர்கள் சொல்லி நான் கேட்டது. பொய் உங்கள் மக்களிடம் கேட்டு பாருங்கள் என சொன்னாலும்... பயில்வான் முகம் காற்று போன பலூன் போல் புஸ் என ஆனது.
Veteran Actor and Journalist Bayilvan Ranganathan
மேலும் உங்கள் வீட்டு பெண்ணை சொல்லும் போது உங்களுக்கு எப்படி வலிக்கிறதோ... அப்படி தான் மற்ற பிரபலங்கள் பற்றியும் அவர்களின் பிள்ளைகள் குறித்தும் நீங்கள் பேசுவது இருக்கும் என தெரிவித்தார்.
Suchitra
இந்த ரணகளம் அடங்குவதற்கு முன்பே... பயில்வானை செத்துப்போ என கூறி பேட்டியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், பாடகி சுசித்ரா. பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த சுசித்ரா, கணவர் கார்த்திக், தனுஷ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரை பற்றி பேசியுள்ளார்.
அப்போது தொகுப்பாளர், பல பிரபலங்களை பற்றி விமர்சித்து பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்க்கு "நாசமா போ... செத்துப் போ... சீக்கிரமே செத்துப் போ.. உன் பொண்ணு ரொம்ப உறுப்புடும்" என வாய்க்கு வந்தபோது வந்தது போல் சாபம் விட்டார்.
பின்னர் தொகுப்பாளர் ஏன் இப்படி ஒரு சாபம்? என கேட்க... செத்துப் போ.. முடிஞ்சா தற்கொலை பண்ணி செத்துப் போ.. இது வந்து என்னுடைய சாபம் இல்லை அவரிடம் ரிக்வெஸ்ட் ஆக கேட்கிறேன். செத்துப் போ என்பது ஒரு ரிக்வெஸ்டா என தொகுப்பாளர் அதிர்ச்சியாகி கேட்க, ஆமாம் அவங்க வீட்டு பக்கத்துல இருக்கிற கடலுக்கு நேரா நடந்து போயி செத்துப் போய் விடு... அப்படியே நடந்து போய்க்கிட்டே இரு, திரும்பி கூட பார்க்காத.
இது நான் அவருக்கு நல்லது. இல்லன்னா யாராவது உன் மண்டையில போட்டு விடுவாங்க. அது ரொம்ப அசிங்கமா இருக்கும். அடி வாங்கி நீ சாகரத்துக்கு நீயே செத்துப்போயிடு என கூறியுள்ளார். சுசித்ராவின் இந்த பேச்சுக்கு பலர் தங்களின் கண்டனங்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.