பழைய பாடலை பட்டி டிங்கரிங் பார்த்து பயன்படுத்தியதால் வெடித்த சர்ச்சை... சிக்கலில் ஏ.ஆர்.ரகுமான்
இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், பிப்பா பட பாடலால் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
AR Rahman
தமிழ் சினிமாவில் பல்வேறு தரமான பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள இசையமைப்பாளர் தான் ஏ.ஆர்.ரகுமான். ரோஜா படத்தில் தொடங்கிய இவரது இசை ராஜ்ஜியம் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இன்றளவும் தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கும் ஏ.ஆர்.ரகுமான், சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
AR Rahman controvery
கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் இவர் நடத்திய மறக்குமா நெஞ்சம் என்கிற இசைக்கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியதை அடுத்து மன்னிப்பு கேட்ட ஏ.ஆர்.ரகுமான், ரசிகர்களுக்கு பணத்தையும் திருப்பி அனுப்பினார். இந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
கடந்த நவம்பர் 10-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆன திரைப்படம் தான் பிப்பா. இப்படத்தை ராஜா மேனன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
AR Rahman Pippa movie
இந்த படத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த சுதந்திர எழுச்சி கவிஞரான கசி நஸ்ரூல் இஸ்லாம் எழுதிய பாடலை இந்த காலத்திற்கு ஏற்ப மறு உருவாக்கம் செய்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். அந்த பாடல் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த பாடலை அவர் சரியாக மறு உருவாக்கம் செய்யவில்லை என்றும் நஸ்ரூலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
நஸ்ரூலின் பேரன் அனிர்பன் கூறுகையில், தனது தாத்தா 1922-ம் ஆண்டு சிறையில் இருந்தபோது எழுதிய அப்பாடல் 1949-ம் ஆண்டு இசை வடிவம் பெற்று பாடலாக மாற்றப்பட்டதாகவும், இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் சிறப்பாக மறு உருவாக்கம் செய்வார் என்று நம்பி அதற்கான உரிமையை வழங்கினோம். ஆனால் அவர் அதற்கு நியாயம் சேர்க்கவில்லை. அதன் உணர்வையும் இசையையும் ரகுமான் சீர்குலைத்துவிட்டதாக அனிர்பன் குற்றம்சாட்டி உள்ளார்.
Pippa movie song
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிப்பா படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை நீக்க வேண்டும் என்று நஸ்ரூலின் பேத்தி அனிந்திதா வலியுறுத்தி உள்ளார். இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில், பிப்பா படக்குழு நஸ்ரூலின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த சர்ச்சை குறித்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குழந்தை நட்சத்திரமாக நடித்தே கோடீஸ்வரி ஆன சாரா! ஸ்கூல் படிக்கும்போதே விக்ரமின் ரீல் மகளுக்கு இத்தன கோடி சொத்தா