குழந்தை நட்சத்திரமாக நடித்தே கோடீஸ்வரி ஆன சாரா! ஸ்கூல் படிக்கும்போதே விக்ரமின் ரீல் மகளுக்கு இத்தன கோடி சொத்தா
பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்த நடிகை சாரா அர்ஜுனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Sara Arjun
இந்தியில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 404 என்கிற படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். அப்படத்தில் நடிக்கும்போது இவருக்கு வயது 5. அதே ஆண்டு தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சாரா. இவர் தமிழில் முதன்முதலில் நடித்த திரைப்படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்தார் சாரா. இவருக்கு, விக்ரமுக்கும் இடையேயான தந்தை மகள் உறவை மையமாக வைத்து தான் அப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.
deiva thirumagal sara
5 வயதிலேயே அப்படத்தில் சாராவின் அசாத்திய நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வாயடைத்துப் போயினர். அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் மற்றும் சாராவின் நடிப்பு வேற ரகம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரே படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உச்சத்துக்கு சென்றுவிட்டார் சாரா. இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
ponniyin selvan Sara Arjun
தெய்வத்திருமகள் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் அடுத்ததாக இயக்கிய சைவம் படத்திலும் சாரா முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். பின்னர் ஹலிதா ஷமீர் இயக்கிய சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த சாராவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது கேரக்டரில் சாரா நடித்திருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Sara arjun father
இப்படத்தில் சாராவின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. தற்போது 17 வயதாகும் சாரா விரைவில் ஹீரோயினாகவும் களமிறங்க உள்ளார். இவரது தந்தை ராஜ் அர்ஜுனும் ஒரு நடிகர் தான். இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
Sara arjun net worth
சாரா தான் இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்துள்ளார். இதனால் 10 ஆண்டுகளில் சாராவின் சொத்து மதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தே சுமார் ரூ.10 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக திகழ்கிறார். ஸ்கூல் படிக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சாரா விரைவில் ஹீரோயினாகவும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வில்லனாக மாறிய பீர்... ஒரு நாளைக்கு இத்தனை பீர் அடிப்பாரா? கலாபவன் மணி மர்ம மரணத்தின் திடுக் பின்னணி