MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா அறிமுகமாகும் 'ஹிட்லிஸ்ட்' படக்குழு ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா அறிமுகமாகும் 'ஹிட்லிஸ்ட்' படக்குழு ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

இயக்குனர் K.S.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குனர் விக்ரமன் மகன் கனிஸ்கா ஹீரோவாக அறிமுகமாக 'ஹிட்லிஸ்ட்' திரைப்படத்தின் படக்குழுவினர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். 

1 Min read
Author : manimegalai a
Published : May 16 2024, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விரைவில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வரும் 'ஹிட்லிஸ்ட்' திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகும் கனிஷ்காவுக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

26

பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதோடு, தெனாலி, கூகுள் குட்டப்பன் போன்ற சில படங்களை தயாரித்துள்ள இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தன்னுடைய  RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக இந்த படத்தை தயாரித்துள்ளார். 

தொகுப்பாளினிக்கு தீர்த்தம் கொடுத்து பாலியல் லீலை... கர்ப்பமாக்கி கழட்டி விட பார்த்த பூசாரி.. பரபரப்பு புகார்!

36

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு காலத்தில், இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றி பின்னரே தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர். எனவே எப்போதும் விக்ரமனை தன்னுடைய குருவாகவே பார்க்கும், கே.எஸ்.ரவிக்குமார்... அவருடைய மகனின் படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார்.

46

கனிஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை, பரபரப்பான திரில்லர் ஜார்னரில்... அறிமுகம் இயக்குனர்களான சூர்யகதிர், மற்றும் K.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் மேனன், சமுத்திரகனி,ஸ்மிரிதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபிநக்ஷத்ரா,அபிநயா,சித்தாரா, முனீஸ்காந்த்,ரெடின் கிங்ஸ்லி,'கே.ஜி.எஃப்' புகழ் 'கருடா'ராமச்சந்திரா, 'மைம்'கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ரம்யா பாண்டியன் கொஞ்சம் ஓரம் போங்க... இடையில் செயின் போட்டு சேலையில் சொக்க வைக்கும் ஷில்பா மஞ்சுநாத்!

56

இத்திரைப்படத்திற்கு  'எங்கேயும் எப்போதும்' புகழ் C.சத்யா இசையமைக்க, ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஜான் ஆபிரகாம் மேற்கொள்ள, கலைஇயக்கத்தை அருண்சங்கர்துரை கவனிக்கிறார்.

66

பரபரப்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

13 வயதில் ஹீரோயின்.. ரஜினி, கமலை தன்னுடைய நடிப்பால் மிரள வைத்த இதில் இருக்கும் 53 வயது நடிகை யார் தெரியுமா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved