MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 13 வயதில் ஹீரோயின்.. ரஜினி, கமலை தன்னுடைய நடிப்பால் மிரள வைத்த இதில் இருக்கும் 53 வயது நடிகை யார் தெரியுமா?

13 வயதில் ஹீரோயின்.. ரஜினி, கமலை தன்னுடைய நடிப்பால் மிரள வைத்த இதில் இருக்கும் 53 வயது நடிகை யார் தெரியுமா?

80-பதுகளில் ஹீரோயினாக அறிமுகமாகி, தற்போது வரை வெயிட்டான ரோலை தேர்வு செய்து நடித்து வரும் பிரபல நடிகை குழந்தையாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : May 15 2024, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

1970 ஆம் ஆண்டு, சென்னையில் பிறந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் பிரபல நடிகரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சோ ராமசாமியின் நெருங்கிய உறவினர் ஆவார். தன்னுடைய 13 வயதிலேயே நடிக்க துவங்கிய ரம்யா கிருஷ்ணன், பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என ஐந்து மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.
 

27

ரம்யா கிருஷ்ணனின் தந்தை, தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தாயார் தமிழ் பிராமணர். இவருடைய மாமா நடிகர் என்பதால், சிறு வயதிலேயே பரதநாட்டியம், குச்சிப்புடி போன்ற கலைகளில் கைதேர்ந்தார் ரம்யா கிருஷ்ணன். வாய்ப்பு தேடுவதற்கு முன்பே ரம்யா கிருஷ்ணனை தேடி பட வாய்ப்புகள் வர துவங்கியது.

எச்சில் பிளேட் கழுவினேன்! ரஜினி சொன்ன தெய்வ வாக்கு என் வாழ்க்கையில் பலித்தது! வெங்கடேஷ் பட் பகிர்ந்த ரகசியம்!
 

37

அதன்படி தன்னுடைய 13 வயதில், தமிழில் வெளியான  'வெள்ள மனசு என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதைத் தொடர்ந்து பார்த்த ஞாபகம் இல்லையோ, படிக்காதவன், முதல் வசந்தம், சர்வம் சக்தி மயம், ஜல்லிக்கட்டு, ஆண்களை நம்பாதே, பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் ஹீரோயினாக நடித்த படங்களை விட, வில்லியாக நடித்த 'படையப்பா' திரைப்படம் ரம்யா கிருஷ்ணன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
 

47

அதே போல் இயக்குனர் ராஜமௌலி நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான 'பாகுபலி' படத்தில் இவர் ஏற்று நடித்த ராஜமாதா கதாபாத்திரம் மாஸ்டர் பீஸாக அமைந்தது. இந்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தார் ரம்யா கிருஷ்ணன்.

DIY - பார்ட்னர்ஷிப்பில் இருந்த கணவரை பிரிந்த லேகா வாஷிங்டன்! 40 வயதில் டாப் நடிகரின் உறவினரை மணக்கிறார்!
 

57

தொடர்ந்து சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு  வம்ஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது மகன் ஒருவரும் உள்ளார். திருமணமாகி குழந்தை பெற்ற பின்னும், தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை ரம்யா கிருஷ்ணனின்.. குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

67

இதில் தன்னுடைய சகோதரி மற்றும் அம்மாவுடன் ரம்யா கிருஷ்ணா இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகின்றனர். 

Urvashi: ஊர்வசி குடிக்கு அடிமையாக காரணம் இந்த பிரபலம் தான்... மீண்டது எப்படி? செய்யாறு பாலு பகிர்ந்த தகவல்!
 

77

ரம்யா கிருஷ்ணா கடைசியாக நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'குண்டூர் காரன்' என்கிற படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தற்போது தமிழில் நடித்துள்ள பார்ட்டி உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரம்யா கிருஷ்ணன்
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved