MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Urvashi: ஊர்வசி குடிக்கு அடிமையாக காரணம் இந்த பிரபலம் தான்... மீண்டது எப்படி? செய்யாறு பாலு பகிர்ந்த தகவல்!

Urvashi: ஊர்வசி குடிக்கு அடிமையாக காரணம் இந்த பிரபலம் தான்... மீண்டது எப்படி? செய்யாறு பாலு பகிர்ந்த தகவல்!

நடிகை ஊர்வசி ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையாக யார் காரணம், அவர் அதில் இருந்து மீண்டும்... இரண்டாம் திருமணம் செய்து கொண்டது எப்படி என, பல தகவல்களை புட்டு புட்டு வைத்துள்ளார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு. 

3 Min read
Author : manimegalai a
Published : May 15 2024, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Urvashi

Urvashi

கேரளாவைச் சேர்ந்த கலை குடும்பத்தில் பிறந்தவர் நடிகை ஊர்வசி. இவருடைய உண்மையான பெயர் கவிதா ரஞ்சனி. சினிமாவில் அறிமுகமான பின்னர், தன்னுடைய பெயரை ஊர்வசி என மாற்றிக் கொண்டார். இவர் பிரபல நாடக நடிகர்களான சாகர விபி நாயர் மற்றும் விஜயலட்சுமிக்கு மகளாக பிறந்தவர். இவருடைய சகோதரிகளான கலா ரஞ்சனி மற்றும் கல்பனா ஆகிய இருவருமே மலையாளம், தமிழ், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். அதேபோல் இவருடைய இரண்டு சகோதரர்களான கமல் ராய் மற்றும் இளவரசன் ஆகிய இருவரும் ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளனர்.
 

28
Urvashi

Urvashi

ஊர்வசியின் இளைய சகோதரரான இளவரசன் தன்னுடைய 26 வயதிலேயே குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதை போல் ஊர்வசியின் சகோதரி கல்பனா கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்.

EstherAnil: பாபநாசம் பட சின்ன பொண்ணா இது? மாலத்தீவில் இருந்தபடி... பிகினி உடையில் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

38
Urvashi

Urvashi

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நான்காம் வகுப்பு வரை படித்த நடிகை ஊர்வசி பின்னர் தன்னுடைய குடும்பம் சென்னைக்கு மாறியதால், கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

48
Urvashi

Urvashi

மலையாளத்தில் இவர் நடித்த சில படங்களை பார்த்துவிட்டு நடிகை ஊர்வசியை தமிழில் தான் இயக்கிய 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் 1983 ஆம் ஆண்டு நடிக்க வைத்தார் பாக்யராஜ். பின்னர் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்தார் ஊர்வசி. இந்த இரண்டு படங்களுமே இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தை கொடுத்த நிலையில், தொடர்ந்து தாவணி கனவுகள், கொம்பேறி மூக்கன், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தால், அன்பே ஓடிவா, போன்ற ஏராளமான படங்களில் நடித்தார். தமிழில் அறிமுகமான ஒரே வருடத்தில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டனர்.

உங்க அளப்பறைக்கு ஒரு அளவே இல்லையா? டிகிரி வாங்கும்போது.. புஷ்பாவா மாறி ஹூக் ஸ்டெப் போட்ட மாணவர்! வீடியோ

58
Urvashi

Urvashi

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் ஊர்வசி தன்னுடைய நடிப்பு திறமையை காட்டினார். ஒரு சில ஹிந்தி படங்களிலும் ஊர்வசி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிப்பை தாண்டி சில படங்களில் டப்பிங் ஹாட்டஸ்ட் ஆகவும் பணியாற்றி உள்ளார். ஸ்டோரி ரைட்டராக தமிழில் மாயா பஜார் 1995, மகளிர் மட்டும் போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார். அதேபோல் மலையாளத்தில் ஒரே ஒரு படத்தை தயாரித்துள்ளார். வெள்ளித்திரையை தொடர்ந்து ஏராளமான சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஊர்வசி.

68
Urvashi

Urvashi

முன்னணி நடிகையாக இருக்கும் போதே பிரபல நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஊர்வசி, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 8 வருடத்திலேயே முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர், சினிமாவில் இருந்தும் ஒதுங்கி இருந்த நிலையில்,  ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையாகி தன்னுடைய வாழ்க்கையை தொலைக்க இருந்ததாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

GV Prakash: ஜிவி பிரகாஷ் விவாகரத்து முடிவுக்கு காரணம் சைந்தவி அம்மா தான்! நடந்தது என்ன? வெளியான ஷாக் தகவல்!

78
Urvashi

Urvashi

இதுகுறித்து ஊர்வசி பேட்டி ஒன்றில் கூறியபோது... "நான் குடிக்கு அடிமையாக காரணம் தன்னுடைய முதல் கணவர் பிரபல நடிகர் மனோஜ் கே ஜெயன் தான் என்றும், மேலும் இந்த குடியில் இருந்து மீள முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததாகவும், பின்னாலில் கடுமையான முயற்சிகளை எடுத்து அதில் இருந்து வெளியே வந்ததாக கூறியிருந்தார். அந்த சமயத்தில் அவரை சுற்றி இருந்த நண்பர்களும், உறவினர்களும், ஊர்வசிக்கு பக்கபலமாக இருந்ததாகவும்... இந்த குடியில் இருந்து மீள, தனக்கு உதவியவர்களில் மருத்துவர் என ஊர்வசி அந்த பேட்டியில் கூறி இருந்தாராம்.
 

88

இவர் ஏற்கனவே தான் நடித்த படங்களில் காட்சிகளை போட்டு காட்டி, இதுபோன்ற நடிப்பை உங்களை தவிர வேறு யாராலும் வெளிப்படுத்த முடியாது. நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும் அதை சற்று நினைவில் கொண்டு குடியில் இருந்து வெளியே வர முயற்சி செய்யுங்கள் என தொடர்ந்து அதற்கான ஊக்கத்தையும், மருந்துகளையும் கொடுக்கவே குடியில் இருந்து மீண்டு வந்துள்ளார் ஊர்வசி. குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்த பிறகு, சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஊர்வசி, மகன் ஒருவரையும் பெற்றெடுத்தார். தற்போது தன்னுடைய குடும்பம், கணவர், மகள், மகன் என சந்தோஷமான வாழ்க்கையை ஊர்வசி வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாசமா போ.. தற்கொலை பண்ணி செத்து போ! இல்ல அடிச்சே கொன்னுடுவாங்க! பயில்வான் மீது பயங்கர வெறியில் சுசித்ரா!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved