தலைவர் 171 ஷூட்டிங்கா? திடீரென விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்.. எங்கு போறாரு தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையம் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Superstar Rajinikanth going to the airport is going viral on social media-rag

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிகர்தண்டா XX படம்‌ ஒரு குறிஞ்சி மலர்‌. கார்த்திக்‌ சுப்பராஜின்‌ அற்புதமான படைப்பு , வித்தியாசமான கதை மற்றும்‌ கதைக்களம்‌. சினிமா ரசிகர்கள்‌ இதுவரைக்கும்‌ பார்க்காத புதுமையான காட்சிகள்‌. 

லாரன்ஸால் இப்படியும்‌ நடிக்க முடியுமா என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின்‌ திரை உலக நடிகவேள்‌. வில்லதனம்‌, நகைச்சுவை, குணசித்திரம்‌ என மூன்றையும்‌ கலந்து அசத்தி இருக்கிறார். திருவோட கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குநரின்‌ உழைப்பு பாராட்டிற்குரியது. 

‘திலீப்‌ சுப்ராயனின்‌’ சண்டை காட்சிகள்‌ அபாரம்‌. ‘சந்தோஷ்‌ நாராயணன்‌’ வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில்‌ மன்னர்‌. இசையால்‌ இந்த படத்திற்கு உயிரூட்டி, தான்‌ ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர்‌ என்பதை இந்த படத்தில்‌ நிரூபித்து இருக்கிறார்‌. இந்தப் படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்‌திருக்கும்‌ தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள்‌. 

படத்தில்‌ வரும்‌ பழங்குடிகள்‌ நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள்‌. நடிகர்களுடன்‌ போட்டி போட்டு கொண்டு யானைகளும்‌ நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும்‌ விதுவை எவ்வளவு பாராட்டினாலும்‌ தகும்‌, அற்புதம்‌. இந்தப் படத்தில் கார்த்திக் சுப்பராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். i am proud of you கார்த்திக் சுப்பராஜ். My hearty congratulations to கார்த்திக் சுப்பராஜ் and team” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையம் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாளை மும்பையில் நடைபெற் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண தான் ரஜினி செல்கிறார் என்று கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் இந்த காணொளியை வைரலாக்கி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios