- Home
- Cinema
- SP Balasubrahmanyam: லதா மங்கேஷ்கர் சேலையில் டீ கொட்டிய எஸ்பிபி-க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!
SP Balasubrahmanyam: லதா மங்கேஷ்கர் சேலையில் டீ கொட்டிய எஸ்பிபி-க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!
Singer SP Balasubrahmanyam : பாடகி லதா மங்கேஷ்கரின் வெள்ளைச் சேலையில் சூடான டீயை எஸ்பிபி கொட்டியபோது என்ன நடந்தது? பாலசுப்ரமணியத்தின் மறக்க முடியாத நினைவுகள் இதோ.
SPB Spilled Hot Tea On Lata Mangeshkar Saree
இசை ஜாம்பவான் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலும், எளிமையான குணமும் இன்னைக்கு வரைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களோட மனசுல வாழ்ந்துட்டு இருக்கு. மொழி தாண்டி ஆயிரக்கணக்கான பாட்டு பாடியிருக்கார் எஸ்பிபி. அவர் ஆரம்ப காலத்துல கன்னடம், தமிழ் கத்துக்கிட்ட சுவாரஸ்யமான கதையும், லதா மங்கேஷ்கர் சேலையில சூடான டீயை கொட்டிய மறக்க முடியாத சம்பவத்தையும் பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார். அந்த நினைவுகளை இப்போ பார்க்கலாம்.
எந்த மொழியில பாடினாலும் அந்த மொழியோட உச்சரிப்பு ரொம்ப முக்கியம்னு நினைச்சவர் எஸ்பிபி. அவரோட தாய்மொழி தெலுங்கு. ஆனா, அவர் கன்னடத்துல பேசுறப்போ அந்த உச்சரிப்பு அவ்வளவு தெளிவா இருக்கும். ஆனா, ஆரம்பத்துல கன்னடம்னு ஒரு மொழி இருக்கிறதே அவருக்குத் தெரியாதாம்.
போஸ்டர் பார்த்து தமிழ் கத்துக்கிட்டேன்
அவர் மொழி கத்துக்கிட்ட நாட்களை பத்தி எஸ்பிபி இப்படி சொல்லியிருந்தார்: "நான் பாடின ரெண்டாவது பாட்டு கன்னடம். முதல் பாட்டு ரெக்கார்டிங் அப்போ, இசையமைப்பாளர் ரங்காராவ் அதை கேட்டுட்டு 'உன்னை நான் கன்னடத்துல பாட வைக்கிறேன்'னு சொன்னார். உண்மையா சொல்லணும்னா, கன்னடம்னு ஒரு மொழி இருக்கிறதே எனக்கு அப்போதான் தெரியும்! அது எப்படி இருக்கும்னு கூட தெரியாது. அப்போ ஒரு கவிஞர் வந்து, 'ஒன்னும் பிரச்சனை இல்லை, இது தெலுங்கு மாதிரிதான் இருக்கும்'னு சொல்லி, தெலுங்குலயே வரிகளை எழுதிக் கொடுத்து பாட வெச்சார். ஆனா, போகப் போக மக்கள் 'கன்னடம்னா அது பாலுவோட குரல்தான்'னு சொல்ற அளவுக்கு அன்பைக் கொடுத்தாங்க."
தமிழ் சினிமாவுக்கு வந்தப்போ, பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் எஸ்பிபிக்கு ஒரு சவால் விட்டாராம். "உன் பாட்டு நல்லா இருக்கு, ஆனா தமிழ் உச்சரிப்பு சரியில்லை. படிக்கத் தெரியலைன்னாலும் பரவாயில்லை, முதல்ல தமிழ் நல்லா பேசக் கத்துக்கிட்டு வா, அப்புறம் வாய்ப்பு தர்றேன்"னு சொல்லியிருக்கார். பெரிய இசையமைப்பாளர் சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்ட பாலு, தெருவுல ஒட்டியிருந்த சினிமா போஸ்டர்களைப் படிச்சே தமிழ் கத்துக்கிட்டாராம்!
லதாஜி வெள்ளைச் சேலையில் டீ கொட்டிய அந்த நாள்
இந்தி சினிமாவின் முடிசூடா ராணி லதா மங்கேஷ்கரை முதல் முறையா சந்திச்சப்போ நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தையும் எஸ்பிபி சொல்லியிருக்கார். "அது 'ஏக் துஜே கே லியே' படத்தோட 'தேரே மேரே பீச் மே' பாட்டு ரெக்கார்டிங் நேரம். லட்சுமிகாந்த்-பியாரேலால் தான் இசையமைப்பாளர்கள். லதாஜி பாடிட்டு இருக்கும்போது நடுவுல நான் 'நீ ரொம்ப நல்லா பாட்றே'னு ஒரு தமிழ் டயலாக் பேசணும். சாட்சாத் லதா மங்கேஷ்கர் பாட்டுக்கு நான் ஒரு சர்டிபிகேட் கொடுக்கணுமேங்குற பயம் எனக்குள்ள இருந்துச்சு.
அவங்க ஸ்டுடியோவுக்கு வந்தப்போ, நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களும் இசையமைப்பாளர்களும் மரியாதையா எழுந்து நின்னாங்க. நான் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அப்புறம் வாய்ஸ் பூத்ல உக்காந்து அவங்க பாட்டு கத்துக்கிட்டு இருந்தாங்க, நான் டயலாக் சொல்ல ரெடியாகிட்டு இருந்தேன். அப்போ எங்களுக்கு டீ கொண்டு வந்தாங்க. எனக்கு ரொம்ப பதட்டமா இருந்துச்சு, பயத்துல கை நடுங்கிட்டு இருந்துச்சு. லதாஜி எப்பவுமே சுத்தமான வெள்ளைச் சேலைதான் கட்டுவாங்கனு எல்லாருக்கும் தெரியும். என் கை நடுங்கி அந்த சூடான டீயை அவங்க சேலையிலயே கொட்டிட்டேன்!
நல்ல சகுனம்
அந்த நிமிஷம் என் நெஞ்சே நின்னுடுச்சு. பாலு சுப்பிரமணியம், இந்தி சினிமாவுல உனக்கு இதுதான் முதல் நாளும் கடைசி நாளும். ரெக்கார்டிங் கேன்சல் ஆகி உன்னை வெளியே துரத்தப் போறாங்கனு நினைச்சேன். ஆனா லதாஜி கொஞ்சம் கூட கோபப்படாம, சிரிச்சுக்கிட்டே 'பஹுத் அச்சா ஷகுன் ஹை பாலுஜி' (இது ரொம்ப நல்ல சகுனம் பாலுஜி) அப்படின்னு சொன்னாங்க! வெள்ளை துணியில காபியோ டீயோ கொட்டினா அது நல்ல சகுனமாம்! அவங்களோட அந்த பெரிய மனசப் பார்த்து நான் நிம்மதி ஆனேன். அப்புறம் வந்த நாட்கள்ல, 'இப்படி நல்ல சகுனம் ஆகுதுன்னா நான் ஒவ்வொரு ரெக்கார்டிங் அப்போவும் உங்க சேலையில காபி கொட்டுவேன்'னு லதாஜி கிட்ட தமாஷ் பண்ணுவேன்"னு எஸ்பிபி அந்த நாட்களை நினைவுகூர்ந்தார்.
மொழி மேல இருந்த பற்றும், சீனியர் கலைஞர்கள் மேல இருந்த மரியாதையும்தான் எஸ்பிபியை இந்திய இசை உலகத்துல ஒரு அழியாத பாடகரா மாத்துச்சுங்குறதுக்கு இந்த சம்பவங்களே சாட்சி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.













