Asianet News TamilAsianet News Tamil

இலங்கையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு!

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது

Earthquake in sri lanka Magnitude of 6.2 smp
Author
First Published Nov 14, 2023, 1:14 PM IST | Last Updated Nov 14, 2023, 1:14 PM IST

இலங்கைக்கு அருகே மதியம் 12.31 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கொழும்புவில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் பக்கத்தில், கொழும்புவுக்கு தென் கிழக்கே 1326 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மதியம் 12.31 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இலங்கை தலைநகர் கொழும்புவில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் மற்றும் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SIP முதலீட்டில் ரூ.10 கோடி சம்பாதிப்பது எப்படி? இத பண்ணுங்க போதும்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios