கனமழை எச்சரிக்கை.! 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்ததெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16ம் தேதி மத்திய மற்றும் அதனை ஓட்டிய தெற்கு வங்கடக்கடலில் தாழ்வு மண்டலமாகும்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாலும், கனமழை எச்சரிக்கையாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.