சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு சேவை!

சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

Vande bharat express special service inbetween Nellai chennai southern railway smp

வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை - மைசூரு, சென்னை - கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தென் தமிழக மக்களுக்காக நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

திருநெல்வேலியில் புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லக்கூடிய இந்த ரயில், மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் மதியம் 2:50 சென்னை எழும்பூரில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது.

வாரம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இந்த ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை கால கூட்ட  நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஏழு வந்தே பாரத்  ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கேரளாவில் மாவோயிஸ்ட்கள் மீது துப்பாக்கிச் சூடு: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நவம்பர் 16, 23, 30,  டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 06.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் அதே தேதிகளில் திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios