MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குட்நியூஸ்.. நவம்பர் 18ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு.!

குட்நியூஸ்.. நவம்பர் 18ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு.!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்கார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 14 2023, 08:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
thoothukudi

thoothukudi

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றின்போது மக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். 

24

இந்நிலையில், இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த சூரசம்கார விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும். இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வர். 

இதையும் படிங்க;- கனமழை எச்சரிக்கை.! 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்ததெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

34

இந்நிலையில் வருகிற 18-ம் தேதி கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் வருகிற 18-ம் தேதி சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

44

எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறி சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் மாதம் 9ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
23 மாவட்டங்களில் இன்று அடிச்சு ஊத்தப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?
Recommended image2
Tamil News Live Today 11 January 2026: Parasakthi Box Office Collection Day 1 - பாக்ஸ் ஆபிஸில் 'பராசக்தி' தாண்டவம்! முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா? விஜய்யின் சாதனையை நெருங்குகிறாரா சிவா?
Recommended image3
ஓய்வூதியம்.. மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக.. பழனிசாமி விளாசல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved