ஆசையோடு காத்திருந்த விக்கி.. அஜித்தை போல் கடைசி நேரத்தில் கழட்டிவிட்ட கமல் - எல்லாத்துக்கும் காரணம் பிரதீப்பா!
அஜித் படம் டிராப் ஆன பின்னர் கமல் தயாரிப்பில் படம் இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன், கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்டதன் ஷாக்கிங் பின்னணியை பார்க்கலாம்.
vignesh shivan
தமிழ் திரையுலகில் இயக்குனர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் இதுவரை போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள், காத்துவாக்குல ரெண்டு காதல் என ஐந்து படங்கள் வெளிவந்துள்ளன. இவர் ஆறாவதாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க கமிட் ஆனார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் கதை திருப்தி அளிக்காததால் அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.
vignesh shivan, Pradeep
விக்னேஷ் சிவனை நீக்கிய பின்னர் அப்படவாய்ப்பை தட்டிதூக்கிய மகிழ் திருமேனி, தற்போது விடாமுயற்சி என்கிற பெயரில் அப்படத்தை இயக்கி வருகிறார். அஜித் கழட்டிவிட்டதும், தன்னுடைய கனவு திரைப்படமான எல் ஐ சி என்கிற திரைப்படத்தை எடுக்க முடிவெடுத்த விக்கி அப்படத்தில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தார். அவருக்கும் கதை பிடித்துப் போனதால் உடனே ஓகே சொல்லிவிட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vignesh shivan, kamal
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. படத்தின் பட்ஜெட்டும் கிட்டத்தட்ட 50 கோடி இருக்கும் என கூறப்பட்டது. இதற்கான ஷூட்டிங்கிற்கு விக்கி ரெடியாகி வந்த சமயத்தில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறது. அந்நிறுவனத்துக்கு பதிலாக நடிகர் விஜய்யின் லியோ படத்தை தயாரித்த லலித் குமார் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம்.
Pradeep Ranganathan, Vignesh shivan
கமல் நிறுவனம் இப்படத்தில் இருந்து விலகியதற்கு பிரதீப் ரங்கநாதன் தான் காரணம் என கூறப்படுகிறது. அவர் அதிகளவில் சம்பளம் கேட்டதாகவும், அதனை கொடுக்க மறுத்ததால் கமல் நிறுவனம் விலகி அந்த வாய்ப்பு லலித்தின் செவன் ஸ்கிரீன் நிறுவனத்துக்கு சென்றுவிட்டதாம். இப்படத்தில் நடிக்க பிரதீப் ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... யார கேட்டு காலைல 7 மணி ஷோ போட்டீங்க! திருப்பூர் சுப்ரமணியத்தின் தியேட்டர் மீது பாயும் நடவடிக்கை