Asianet News TamilAsianet News Tamil

ஜோவிகா ஆபத்தான ரிலேஷன்ஷிப்ல இருக்கா... வனிதா மகள் மீதுள்ள ஆதங்கத்தை பிக்பாஸ் வீட்டில் கொட்டிய விசித்ரா

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா ஆபத்தான நபர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளதாக பிக்பாஸ் போட்டியாளர் விசித்ரா கூறிய புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

BiggBoss vichithra says vanitha daughter Jovika is in poisonous relationship gan
Author
First Published Nov 14, 2023, 3:23 PM IST | Last Updated Nov 14, 2023, 3:23 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பல்வேறு சண்டைகள் சர்ச்சைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் இந்த சீசனில் முதன்முதலில் வெடித்த பெரிய சண்டை என்றால் அது ஜோவிகா - விசித்ரா இடையேயான மோதல் தான். ஜோவிகா, அடிப்படை கல்வியாவது படிக்க வேண்டும் என விசித்ரா கூறியதற்கு, ஜோவிகா எதிர்த்து சண்டையிட்டு பேசி இருந்தார். இந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் விவாத பொருளாக மாறியது.

அப்போது ஜோவிகா விசித்ராவை மரியாதை குறைவாக பேசியதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். மறுபுறம் ஜோவிகாவுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்து வந்தனர். இந்த பிரச்சனை முடிந்து பின்னர் ஜோவிகா, விசித்ரா இருவரும் சமாதானம் ஆகி மீண்டும் ஒன்றாக சேர்ந்துவிட்டனர். ஆனால் கடந்த வாரம் மாயாவின் புல்லி கேங் உடன் சேர்ந்து ஜோவிகா பேசிய பேச்சுக்கள் விசித்ராவை கடுமையாக பாதித்துள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this linkhttps://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

BiggBoss vichithra says vanitha daughter Jovika is in poisonous relationship gan

அதுபற்றி தற்போது தினேஷிடம் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார் விசித்ரா. அதன்படி, நான் கேம்னு நினைச்சு ஆடல, இவங்களா வலையில வந்து விழுறாங்க. ஜோவிகா பற்றி பேசும்போது எதார்த்தமாக தான் நான் படிப்பு பற்றி சொன்னேன். அதை பெரிய பிரச்சனை ஆக்கினது அவ தான். இதற்கு பதிலளித்த தினேஷ், அவங்க கேம் ஆடிட்டு நான் விளையாடக் கூடாதுனு நினைக்குறாங்கல்ல, ஒருவேளை அது அவங்களோட கேம் ஆகக் கூட இருக்கலாம் என சொல்கிறார்.

இதையடுத்து பேசிய விசித்ரா, என்னைப்பொறுத்தவரை அவள் poisonous ரிலேஷன்ஷிப்ல இருக்கா. அவகூட இருக்குற எல்லாமே விஷங்க. அதனால் அவளும் அந்த மாதிரி தான் யோசிப்பா என மாயா, பூர்ணிமா ஆகியோரையும் சைடு கேப்பில் சாடி இருக்கிறார் விசித்ரா. ஜோவிகா பற்றி விசித்ரா பேசிய இந்த புரோமோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... டாஸ்கில் தோற்றதால் இழுத்து மூடப்பட்ட பெட் ரூம் கதவுகள்! எலிமினேட் பண்ணிடுங்க கொந்தளித்த கூல் சுரேஷ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios