- Home
- Tamil Nadu News
- பனி குறைய போகுது.! மழையின் ஆட்டம் தொடங்கப்போகுது! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
பனி குறைய போகுது.! மழையின் ஆட்டம் தொடங்கப்போகுது! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
தமிழகத்தில் பிப்ரவரி 20ம் தேதியையொட்டி தெற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், பனிப்பொழிவு குறைந்து மழைக்கு வாய்ப்புள்ளது.

போதிய மழை பெய்யாததால் விவாயிகள் ஏமாற்றம்
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதலே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகளின் நீர்மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்யாமல் ஏமாற்றம் மிஞ்சியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
வாட்டி வதைக்கும் குளிர்
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி வடகிழக்கு பருவமழை விலகியதை அடுத்து கடும் பனிபொழிவு நிலவி வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதாவது பகல் நேரங்களில் வெயிலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடும் குளிரும் வாட்டி வதைத்து வந்தது. நீலகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் உறைபனி நிலவி வந்தது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் மூடு பனி நிலவி வந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஏறியவிட்டவாரே சென்றனர். இதனால் விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
வறண்ட வானிலை
இந்நிலையில் இன்று முதல் நாளை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் பிப்ரவரி 13ம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன்
இந்நிலையில் கடும் பனிபொழிவு நிலவி வரும் நிலையில் தெற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கூறியுள்ளார். அதாவது தமிழகத்தில் பனிப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில் பிப்ரவரி 20ம் தேதியையொட்டி தெற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பிப்ரவரி 20ம் தேதி முதல் பனிப்பொழிவு குறைந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

