அலுவலகத்தை காலி செய்யும் தவெக.. ஆதவுக்கு செக் வைக்கும் மாமனார்..! பின்னணியில் திமுக?
தேர்தல் வரை இருக்க அனுமதிக்கும்படி ஆதவ் அர்ஜுனா கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், உடனடியாக காலி செய்யச் சொல்லி அழுத்தம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக தவெக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கிற தவெக தேர்தல் வியூக அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய சொல்லி விட்டடாக கூறப்படுகிறது. வேற இடத்தை பார்த்து கொண்டு இருக்கிற விஜய்க்கு நெருக்கடிகள் அதிகமாயிருப்பதாக சொல்கிறார்கள்.
சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கிற ஒரு பிரம்மாண்ட காம்ப்ளக்ஸில் தவெகவின் வியூக வகுப்பு நிறுவன அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலக இடம் பிரபல லாட்டரி வியாபாரி மார்டினுக்கு சொந்தமானது என்கிறார்கள். அந்த அலுவலகத்தில் தான் அவருடைய மருமகனும் தவெக முன்னணி தலைவராக இருக்கிற ஆதவ் அர்ஜூனா தனடு ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்த அலுவலகத்திலேயே தவெகவின் ஒட்டுமொத்த தேர்தல் வியூக அலுவலகமும், அதற்கான ஊழியர்களும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. வாய்ஸ் ஆப் காமன்ஸ் உட்பட தவெகவின் வியூக அலுவலகத்தையும் ஒட்டு மொத்தமாக காலி செய்ய சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வேறு வழியில்லாமல் மொத்த அலுவலகத்தையும் காலி செய்து கொண்டிருக்கிற தவெகவும் ஆதவும், வேற இடத்தில் ஆபீஸ் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் வரை இருக்க அனுமதிக்கும்படி ஆதவ் அர்ஜுனா கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், உடனடியாக காலி செய்யச் சொல்லி அழுத்தம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக தவெக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
