Vijay Sethupathi Net Worth: டாப் ஹீரோ.. மாஸ் வில்லன்! விஜய் சேதுபதியின் சொத்து மற்றும் கார் கலெக்ஷன் விவரம்!

First Published Jan 16, 2024, 4:57 PM IST

வெற்றிகரமான ஹீரோவாக மட்டும் இனி... வெறித்தனமான வில்லனாகவும் ரசிகர்களை கவர்த்துள்ள நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

தேசிய விருது நாயகனான விஜய் சேதுபதி, கோலிவுட் திரையுலகில் அறிமுகமான சில வருடங்களிலேயே நிலையான இடத்தை பிடித்தார். முன்னணி ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் போதே...  ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்,என தொடங்கி பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
 

நடிகர் விஜய் சேதுபதி ராஜபாளையத்தில், 1978ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி பிறந்தார். 5- வகுப்பு வரை, ராஜபாளையத்தில் படித்த இவர், 6ம் வகுப்பு படிக்கும் போது இவரது தந்தையின் தொழில் காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் தன்னுடைய பள்ளி படிப்பை, கோடம்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மேல்நிலைப் பள்ளியிலும், லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் முடித்தார். பின்னர் துரைப்பாக்கத்தில் உள்ள தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரியில் பி,காம் பட்டம் பெற்றார்.

பட்டு புடவையில் தேவதை போல் இருக்கும் மிஷ்கின் மகள்? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகு.. வைரல் போட்டோஸ்!
 

சிறு வயதிலேயே நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டதால், தனது 16 வயதிலேயே நம்மவர் என்கிற படத்தின் ஆடிஷனின் கலந்து கொண்டு, உயரம் குறைவாக இருந்த காரணத்தால் வெளியேற்றப்பட்டார். கல்லூரியில் படித்து கொண்டே... சேல்ஸ் மேன் வேலை முதல் ஃபோன் பூத் ஆபரேட்டர் வரை பல வேலைகளை செய்துள்ளார் விஜய் சேதுபதி. 
 

ஒரு கட்டத்தில் குடும்ப சுமை இவர் மீது விழம் துபாய்க்கு கணக்காளர் வேலைக்கு சென்றார். அங்கு இந்தியாவில் கிடைத்ததை விட 4 மடங்கு அதிக சம்பளம் கிடைத்தது. துபாயில் வேலை செய்த போது தான் விஜய் சேதுபதி,தனது வருங்கால மனைவி ஜெஸ்ஸியை ஆன்லைனில் சந்தித்தார். பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் 2003 இல் திருமணம் செய்து கொண்டனர். 

சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி, உள்ளிட்ட பல பிரபலங்களினின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்!
 

திருமணத்திற்கு பின்னர் துபாயில் இருப்பது பிடிக்காமல் இந்தியா வந்த விஜய் சேதுபதி, கூத்துப்பட்டறையில் கணக்காளராக சேர்ந்து, மெல்ல மெல்ல தனக்குள்ளும் நடிப்பு ஆற்றலை வளர்த்து கொண்டார். 
 

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல,  உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடத்தில் நடிக்க துவனிய விஜய் சேதுபதி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து சில குறும்படங்களில் பணியாட்டினார். இவரது குறும்படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியர்ந்த சீனு ராமசாமி 2010-ல் தான் இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. அதுவே விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குழுவினருக்கு பொங்கல் ட்ரீட் வைத்த கமல்ஹாசன்! வைரல் போட்டோஸ்
 

2012-ல் கார்த்திக் சுப்புராஜ் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்கள் மூலம் விஜய் சேதுபதி பிரபலமானார். பின்னர் 2013-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படம் விஜய் சேதுபதியின் மற்றொரு நடிப்பு பரிமாணத்தை காட்டியது.
 

ஒரு கட்டத்தில் டாப் ஹீரோ என்கிற இடத்தை பிடித்த விஜய் சேதுபதி, மற்ற ஹீரோக்களை விட மிகவும் வித்தியாசமானவர். தன்னுடைய ரசிகர்களை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து போஸ் கொடுக்கும் அளவுக்கு கூல் மேன். ஹீரோவாக நடிக்கும் போதே... சில படங்கங்களில் குணச்சித்திர வேடத்திலும், சில படங்களில் வில்லனாகவும் நடிக்க துவங்கினார்.

Kanguva 2nd Look: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சூர்யா! பொங்கலை மெர்சல் செய்த 'கங்குவா' படத்தின் செகண்ட் லுக்!
 

அந்த வகையில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா முதல்... விக்ரம், மாஸ்டர், ஜவான் என அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

விஜய் சேதுபதி தான் நடிக்கும் படங்களுக்கு 20 முதல் 30 கோடி வரை சம்பளமாக பெரும் நிலையில்... தற்போது இவரது சொத்து மதிப்பு 170 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் இவர் வசித்து வரும் வீடு சுமார் 50 முதல் 60 கோடி வரை இருக்கும் என்றும்... வடசென்னை, எண்ணூர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் இவருக்கு பங்களாக்கள் உள்ளது. இதுதவிர தமிழகத்திலும் அவருக்கு சில சொத்துக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நடிகை மீனா! பாஜகவில் இணைந்து விட்டாரா? வைரலாகும் புகைப்படங்கள்!
 

மேலும் விஜய் சேதுபதிக்கு ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரது கேரேஜில் BMW 7 (ரூ. 1.60 கோடி), ரூ. 39.5 கோடி மதிப்புள்ள மினி கூப்பர், டொயோட்டா, இன்னோவா மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகியவை உள்ளதாம். 
 

click me!