அடகவுளே! இப்படியொரு கொடூர புருஷனா? ஓடும் பேருந்தில் இருந்து காலால் எட்டி உதைத்த கணவன்! கர்ப்பிணி மனைவி பலி!

By vinoth kumar  |  First Published Jan 30, 2024, 11:49 AM IST

ஓடும் பேருந்தில் இருந்து கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்து கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஓடும் பேருந்தில் இருந்து கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்து கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைமெய்யன். இவருடைய மகன் பாண்டியன் ( 24). இவருக்கும், நத்தம் கல்வேலிபட்டியை சேர்ந்த பாலமுருகன் மகள் வளர்மதி (19) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது வளர்மதி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் தாய் வீட்டிற்கு தனது கணவனுடன் பொன்னமராவதி நோக்கி அரசு பேருந்தில் பயணித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: புருஷனை கழட்டிவிட்டு எஸ்கேப்பான மனைவி.. இறுதியில் கள்ளக்காதலனுக்கும் அதிர்ச்சி கொடுத்த பெண்..!

அப்போது பேருந்திலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மது போதையில் இருந்த கணவர் ஆத்திரத்தில் ஓடும் பேருந்தின் பின் படிக்கட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த வளர்மதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பேருந்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் இருந்ததாலும், அனைவரும் பேருந்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்ததாலும் யாரும் இச்செயலை கவனிக்கவில்லை.

இதையும் படிங்க: அண்ணியை கதறவிட்டு கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன்.! நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்.!

இதனையடுத்து பேருந்தின் முன்பகுதிக்குச் சென்ற பாண்டியன் எனது மனைவியை நான் கீழே தள்ளிவிட்டேன் பேருந்தை நிறுத்துங்கள் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி சாணார்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வளர்மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி மனைவியை கணவனே பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!