
நேற்று வெளியான வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நிலையில் விஜய்யின் பிறந்தநாளான இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 'தளபதி 66':
விஜய் தற்போது வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் 66 வது படத்தில் நடித்து வருகிறார். தமிழ்-தெலுங்கு என பன்மொழித் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன..
'தளபதி 66' படத்தில் யோகி பாபு, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்ட்டடாக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இது ஒரு குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என ஏற்கனவே இயக்குனர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்:
இந்த நிலையில், விஜய் நடிக்கும் அவரது 66வது படத்திற்கு வாரிசு என்ற டைட்டில் பொருத்தமாக உள்ளதென்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுவரை இல்லாத தோற்றத்தில் நேற்று வெளியான வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நிலையில் விஜய்யின் பிறந்தநாளான இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மற்றொரு அப்டேட்டை வாரிசு படக்குழுவினர் இன்று மாலை வெளியிட உள்ளனர்.