புருஷனை கழட்டிவிட்டு எஸ்கேப்பான மனைவி.. இறுதியில் கள்ளக்காதலனுக்கும் அதிர்ச்சி கொடுத்த பெண்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடியை சேர்ந்தவர் தர்மேந்திரன் (44) இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சரவணன் (41) என்பவரது மனைவி இலக்கியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

illegal love... boy friend Escape wife tvk

கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலன் காதை கத்தியால் வெட்டிய பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடியை சேர்ந்தவர் தர்மேந்திரன் (44) இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சரவணன் (41) என்பவரது மனைவி இலக்கியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. சரவணை பிரிந்து தர்மேந்திரனுடன் கணவர், மனைவி போல் கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். 

 இதையும் படிங்க;- ஆசிரியை தீபிகாவை இதற்காகத்தான் கொன்று புதைத்தேன்.. இளைஞர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

கடந்த சில வாரங்களுக்கு முன் இலக்கியா, தர்மேந்திரனையும் கழட்டுவிட்டுட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதையறிந்த சரவணன் கடந்த 22ல் தர்மேந்திரன் வீட்டிற்கு சென்று என் மனைவி பிரிந்ததற்கு நீ தான் காரணம். தற்போது நீயும் நிம்மதியாக வாழ முடியாமல் போய் விட்டது என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். 

 இதையும் படிங்க;-  என்ன சுத்து போட்டுட்டாங்க சார்.! என்னோட லைப் முடிஞ்சது.. போலீசிடம் கதறிய செய்தியாளர்! வைரலாகும் பகீர் ஆடியோ.!

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தர்மேந்திரனை காதை வெட்டியுள்ளார். ரத்த சொட்ட சொட்ட வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொன்று சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios