
சின்மயி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத, ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தவர். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெறும் ஒரு தெய்வம் தந்த பூவே என்கிற பாடல் மூலம் அறிமுகமானவர் சின்மயி. இதையடுத்து ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய சின்மயி, மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர்.
சின்மயி பாடல்கள்:
சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ஆதவன் படத்தில் வாராயோ வாராயோ பாடல் பாடியுள்ளார். விமல் நடிப்பில் வெளியான வாகை சுட வா திரைப்படத்தில் சர சர சாரா காத்து, இதயத்தில் ஏதோ ஒன்று உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.குறிப்பாக, கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் அவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது குறிப்பிடத்தக்கது.
சின்மயி திருமணம்:
சினிமாவில் பாடல் பாடுவதில் பிஸியாக இருந்த சின்மயி, கடந்த 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ஆண்டு டிகர் ராகுல் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.
சின்மயி #MeToo சர்ச்சை
சினிமா, குடும்ப வாழ்வில் பிஸியான இருக்கும் சின்மயி, அவ்வப்போது #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் தொல்லைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். முதன் முதலில், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த மீடூ புகார் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்.
சின்மயி குழந்தை:
இதையடுத்து, தன்னுடைய நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருக்கும் சின்மயி பாதிக்கப்பட்ட பெண்கள், மாணவிகள் இவரது ட்விட்டர் பக்கத்திற்கு ஆதாரங்களுடன் பாலியல் புகார்களை அளித்து வருகிறார்கள். அதை இவர் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர்களை மறைத்துவிட்டு குற்றவாளியின் பெயரை பதிவிட்டு வருகிறார்.இந்த நிலையில் தற்போது, சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தைகளின் பெயர்களோடு, அவர்களின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.