நாக சைதன்யா அக்கினேனி - சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' படக்குழுவினர் சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரில் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர், நாக சைதன்யா இதுவரை நடித்த படங்களை விட மாறுபட்ட வேடத்தில், இயக்குநர் சந்து மொண்டேட்டியுடன் இணைந்து பணியாற்றி வரும் திரைப்படம் 'தண்டேல்'. இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிக்கிறார். இப்படம் நாகசைதன்யாவின் 23-ஆவது படமாக உருவாகி வருகிறது.
நாக சைதன்யா இந்த படத்தில் ஒரு மீனவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடித்து வருகிறார். மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி என இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக ஒருபுறம் நடந்து வரும் நிலையில், சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு சாய் பல்லவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த வீடியோவில் சாய் பல்லவியின் ஹிட்டான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 'தண்டேல்' ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் நடித்த போது, குழந்தைகளுடன் விளையாடிய போது எடுக்கப்பட்ட அமர்க்களமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, சாய் பல்லவிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.