டாப் 10 TRP-யில் இடம்பிடித்த புது சீரியல்! டல் அடித்த விஜய் டிவி சீரியல் ரேட்டிங்.. டஃப் கொடுக்கும் ஜீ தமிழ்!

First Published May 10, 2024, 12:21 AM IST

இந்த வருடத்தின் 18-ஆவது வாரத்தில், ரூரல் மற்றும் அர்பனில் டாப் 10 இடங்களை பிடித்த டாப் 10 சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

இந்த வாரம் வழக்கம் போல், 'சிங்கப்பெண்ணே' சீரியல் 9.25 TRP புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. ஒரு வழியாக, அன்புவின் அம்மாவிடம் இருந்து மன்னிப்பை பெற்ற சந்தோஷத்தில் இருக்கும் ஆனந்தி, அன்புவை காதலிப்பாரா? அல்லது மகேஷின் காதலை ஏற்றுக்கொள்வாரா? என்கிற எதிர்பாராத திருப்பு முனைகளுடன் இந்த சீரியல் பரபரப்பான கதை களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதே போல் இந்த வாரம் TRP ரேட்டிங்கில்  8.44 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது கயல் சீரியல். ஒருவழியாக கயலுக்காக அவரின் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில்... அடுத்த வாரத்திலாவது கயல் - எழில் நிச்சயதார்த்தம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Raayan Story Leak: கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கிய தனுஷ்..! 'ராயன்' பட கதை இதுவா? லீக்கானதால் அதிர்ச்சி!

இந்த வாரம் அடித்து பிடித்து... மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது எதிர்நீச்சல் தொடர். கடந்த வாரம் மிகவும் குறைவான TRP ரேட்டிங்கை பெற்ற இந்த தொடர், இந்த வாரம் 8.6 TRP புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும் இந்த சீரியலின் கதைக்களத்தை பரபரப்பாக மாற்ற விரைவில் புதிய கதாபாத்திரம் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, 8.05 TRP புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது வானத்தை போல தொடர். பொன்னி இதுவரை சின்ராசுவை பழிவாங்க நினைத்தாலும்... தன்னுடைய புருஷன் உயிரை காப்பாற்றவும் போராடி வருகிறார். தன்னுடைய கணவரின் உயிரை கருத்தில் கொண்டாவது பொன்னி திருந்துவாரா? துளசி மீது விழுந்த பழி நீங்குமா? என்கிற பரபரப்பான காட்சிகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

Vijayakanth: கேப்டன் சார்பாக பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

கடந்த வாரம் டாப் 3 பட்டியலில் இடம்பிடித்த விஜய் டிவி தொடரான  சிறகடிக்க ஆசை, இந்த வாரம் 7.24 TRP புள்ளிகளுடன், 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது. முத்து மீது விழுந்த பழியை துடைக்க மீனா போராடிய காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்தது ரோகிணியின் சதி திட்டம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், அவரை பற்றிய உண்மைகளை கூடிய விரைவில் முத்து கண்டு பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து சுந்தரி சீரியல் 6.82 TRP புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது. பிரைம் டைமில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தாலும், முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு , இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என்பதே ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

Flash Back: ஒரு மணிநேரம் யோசிச்சும் ஒன்னும் வரல! கலைஞர் சொன்ன வரிக்கு... வாலிக்கு முத்தம் கொடுத்த MGR!
 

malli serial

ஏழாவது இடத்தை பிடித்துள்ளது, கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் புதிதாக துவங்கப்பட்ட மல்லி சீரியல்.  இந்த சீரியல் 6.36 புள்ளிகளை பெற்றுள்ளது. இறக்க குணம் கொண்ட கிராமத்து பெண் எப்படி ஏற்கனவே திருமணமான ஒருவரை அவருடைய மகளுக்காக திருமணம் செய்து கொள்கிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களமாக காட்டப்படுகிறது. எனினும் துவங்கிய வேகத்தில் இந்த சீரியல் TRP லிஸ்டில் இடம்பிடித்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
 

அடுத்த இடத்தில், அதாவது இந்த வாரம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது பாக்கியலட்சுமி தொடர். ராதிகா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற உண்மை தெரிய வரும் நிலையில், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எக்க சக்க எதிர்பார்ப்புடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம், 6.27 TRP புள்ளிகளை இந்த தொடர் பெற்றுள்ளது.

Vijay Deverakonda Net Worth: 35 வயதில் அசுர வளர்ச்சி.. விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இதை தொடர்ந்து, TRP லிஸ்டில் 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியல். மீனாவுக்கு சர்பிரைஸாக ஒரு பக்கம் நகைகளை எடுத்து வந்து அவரின் அம்மா கொடுக்க இதனால் மீனா படு குஷியாகி விடுகிறார். மற்றொரு புறம் ராஜீ மீது கதிருக்கு காதல் வருவதை பார்க்க முடிகிறது. இங்கு எல்லாம் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தாலும்... தங்க மயில் எதிர்பாராத ஒரு குண்டை போட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சீரியல் 5.81 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.
 

Karthigai deepam serial

TRP லிஸ்டில் கடைசி இடத்தை பிடித்துள்ளது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' தொடர். கார்த்தி தன்னுடைய கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்வது, ஐஸ்வர்யா விவாகரத்து கேட்பது என விறுவிறுப்பான கதைகளதுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 5.47 TRP புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நாக சைதன்யா மற்றும் 'தண்டேல்' பட குழுவினருடன் கேக் வெற்றி பிறந்தநாள் கொண்டாடிய சாய் பல்லவி! போட்டோஸ்
 

click me!